திருஷ்டி எடுத்த மாதிரி ஆயிடுச்சு.. மூக்குத்தி அம்மன் 2 சர்ச்சை குறித்து குஷ்புவின் எக்ஸ் பதிவு

Kushboo: மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பேச்சுவார்த்தை தொடங்கிய போதிலிருந்தே ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கிறது. முதல் பாகத்தை எடுத்த ஆர் ஜே பாலாஜி சம்பளம் அதிகமாக கேட்டார்.

இதனால் அவருக்கு பதிலாக சுந்தர் சியை வைத்து படத்தை இயக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி ஒரு கோடி செலவில் சமீபத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை போடப்பட்டது.

அதிலிருந்து இன்னும் பிரச்சனை பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்தது. பூஜையில் நயன்தாரா மீனாவை அவமதித்தார் என்று கூறப்பட்டது. இது ஒரு புறம் இருக்க படப்பிடிப்பிலும் நயன்தாரா உதவி இயக்குனரிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்பட்டது.

மூக்குத்தி அம்மன் 2 படம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த குஷ்பூ

khushbu-tweet

இதனால் கோபமடைந்த சுந்தர் சி நயன்தாராவை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று கூறியதாகவும் செய்திகள் வந்தது. தொடர்ந்து இந்த படத்தைப் பற்றிய செய்திகள் நாளுக்கு நாள் வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி குஷ்பூ எக்ஸ் தள பதிவு போட்டிருக்கிறார்.

அதாவது சுந்தர் சி எப்படிப்பட்ட இயக்குனர் என்பது எல்லோருக்குமே தெரியும். அதேபோல் நயன்தாராவும் தனது திறமையால் இந்த நிலையில் இருக்கிறார். தேவையில்லாமல் மூக்குத்தி அம்மன் 2 படத்தை பற்றி நிறைய வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது.

இது எல்லாமே திருஷ்டி எடுத்த மாதிரி ஆகிடுச்சு, படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சுந்தர்சியின் அடுத்த பிளாக்பஸ்டர் படத்திற்கு காத்திருங்கள் என்று குஷ்பூ ட்வீட் செய்துள்ளார்.

மேலும் குஷ்பூ பிரச்சனை பெரிதாக கூடாது என்பதற்காக இவ்வாறு பதிவு போட்டிருக்கிறாரோ என்று கூறப்படுகிறது. ஏனென்றால் மிகப்பெரிய பட்ஜெட் என்பதால் தயாரிப்பு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் கூட இவ்வாறு செய்ய வாய்ப்பு இருக்கிறது.

Leave a Comment