தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் கொஞ்ச நாட்களாகவே மையோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நாட்களை கடந்து வந்தார். அதிலிருந்து மீண்டு இப்பொழுது மறுபடியும் புது தன்னம்பிக்கையுடன் எல்லாவித போராட்டங்களையும் கடந்து நடிக்க வந்திருக்கிறார்.
அப்படிப்பட்ட இவரை கேவலப்படுத்தும் விதமாக பின்னணி பாடகி ஒருவர் சமீபத்தில் பேசி இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை அம்மன் பாடல்களை பாடி தமிழ் சினிமாவில் முன்னணி பாடகி என்ற இடத்தை பிடித்த எல்.ஆர் ஈஸ்வரி. அம்மன் பாடல்கள் என்றாலே இவர் பாடிய பாடல் ஆகத்தான் இருக்கும். ஆனால் இவர் இந்து மதத்தை சேர்ந்தவர் அல்ல ஒரு கிறிஸ்தவர்.
பின்பு இவர் தொழிலுக்காக மதம் மாறி இவருடைய பெயரை மாற்றி தற்போது வரை நல்ல நிலைமையில் பாடிக்கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் பேசிய போது புஷ்பா படத்தில் இடம்பெறும் ஊ சொல்றியா மாமா ஊ ஊகும் சொல்றியா மாமா பாடலைப் பற்றி பேசி அதை மிகவும் கேவலப்படுத்தி உள்ளார்.
அத்துடன் இந்த பாடலை பாடிய குரல் மற்றும் பாடலின் வரிகளை பற்றியும் அசிங்கப்படுத்தி உள்ளார். இதற்கு அடுத்தபடியாக இதில் நடனமாடிய நடனத்தைப் பற்றியும் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதெல்லாம் ஒரு நடனமா எப்படி இப்படியெல்லாம் ஆடுறாங்க என்றும் அது ஒரு மிகப்பெரிய கேவலமான பாடல் என்றும் கூறி இருக்கிறார்.
மேலும் எங்கள் காலத்தில் பாடல்கள் என்றாலே அப்படி ஒரு அர்த்தமுள்ள பாடல்களாக இருக்கும். ஆனால் அது போல் இப்பொழுது பாடல்கள் அமையவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த மாதிரி பாடல்களை சினிமாவிற்கு தயவு செய்து கொடுக்காதீர்கள் என்று கேட்டிருக்கிறார். இதே போல் பாடல் வந்தால் சினிமாவை பார்க்கும் குழந்தைகள் கூட கெட்டுப் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இதனால் இந்த மாதிரியான பாடல் வரிகளையும், நடனத்தையும் தவிர்த்து விட்டால் அது சினிமாவில் நல்ல எதிர்காலத்தை கொடுக்கும். இதை கருத்தில் கொண்டு இனிமேல் வரப்போகிற படங்களும் இருந்தால் மிகப்பெரிய சந்தோசம் என்று கூறியிருக்கிறார். ஆனால் இவர் இப்படி பேசியதை சமந்தாவின் ரசிகர்கள் அவருடைய நடனத்தை தவறாக பேசி விட்டார் என்று கமெண்ட்ஸில் எல்.ஆர் ஈஸ்வரியை தாக்கி வருகிறார்கள்.