சூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா பண்ணும் அக்கப்போரு.. விசாரித்ததில் வெளிவந்த லேடி சூப்பர் ஸ்டாரின் தங்க மனசு

Nayanthara: நயன்தாரா கல்யாணம் பண்ணுவதற்கு முன் சினிமாவில் அவருக்கு ஏறுமுகமாக தான் பல வெற்றிகளை குவித்து வந்தார். ஆனால் எப்பொழுது கல்யாணம் ஆனதோ, அப்பொழுதே இவருடைய மார்க்கெட் போய்விட்டது என்பதற்கு ஏற்ப நடித்த படங்கள் பெருசாக எடுபடவில்லை. அந்த வகையில் கடந்த வருடம் வெளிவந்த அன்னபூரணி மற்றும் இறைவன் படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது.

ஆனாலும் தந்திரமாக பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்து அட்லீ இயக்கிய ஜவான் படத்தில் முதன்முறையாக காலடி வைத்தார். அப்படி நடித்த முதல் படமே வசூல் அளவில் 1000 கோடிக்கு மேல் லாபத்தை பெற்று பாலிவூட்டின் லக்கி ஹீரோயினாக பெயர் எடுத்து விட்டார். இருந்தாலும் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு இரண்டு மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அந்த வகையில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் “தி டெஸ்ட்” திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனை அடுத்து “1960 முதல் மண்ணாங்கட்டி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கான செட்டிங் அனைத்தும் வெளியூரில் தான் இருக்கிறது என்று பட குழு சொல்லி இருக்கிறார்கள். அதற்கு நயன்தாரா அவுட்டோர் ஷூட்டிங் வரமாட்டேன். அதனால் சென்னையிலேயே அதற்கான செட்டுகளை போடுங்க என ஆடர் போட்டு அக்கப்போர் பண்ணி இருக்கிறார்.

இப்படி நயன்தாரா பிடிவாதமாக இந்த விஷயத்தில் இருந்ததால் வேறு வழி இல்லாமல் சென்னையிலேயே ஊட்டி கிரேப் கார்டன் மாதிரி செட்டிங்ஸ் போட்டுள்ளனர். அந்த வகையில் போரூர் மற்றும் தாம்பரம் எல்லாமே தற்போது அவுட்டோர் ஆக மாறிவிட்டது. ஆனால் நயன்தாரா அப்படி சொன்னதற்கான காரணம் என்ன என்று விசாரித்து பார்த்ததில் அவருடைய உண்மையான தங்க மனசு வெளிவந்திருக்கிறது.

அதாவது சூட்டிங் நடந்து முடிந்து விட்டது என்றால் அதை மொத்தமாக எரித்து விடுவார்களாம். இப்படி ஊட்டியில் செய்தால் மொத்த அட்மாஸ்பியரும் பாழாகிவிடும். அதனால் தான் அந்த மாதிரியான ஒரு சூழலை அங்கே ஏற்படுத்தி கெடுக்க வேண்டாம் என்ற நினைப்பில் தான் நயன்தாரா இங்கேயே அதற்கான செட்டுகளை அமைத்து படப்பிடிப்பை நடத்தலாம் என்று கூறி இருக்கிறார். உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் என்று பெயருக்கு ஏற்ற மாதிரி நல்ல விஷயங்களை யோசித்துப் பார்த்து செயல்பட்டு இருக்கிறார்.