தயாரிப்பாளரை ஹோட்டலுக்கு வர சொன்ன லைலா.. ஏடாகூட ஆசையால் பறிபோன பட வாய்ப்பு

தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் சினிமாவில் நுழையும் போது நடிகைகளை மிஸ்யூஸ் செய்வதாக ஏகப்பட்ட தகவல்கள் வெளி வருகிறது. நடிகை லைலாவின் ஏடாகூடமான ஆசையால் தயாரிப்பாளரை ஹோட்டலுக்கு வர சொன்னது மட்டும் இன்றி அதனால் தன்னுடைய பட வாய்ப்பையும் பறி கொடுத்துவிட்டார்.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான தயாரிப்பாளராக இருக்கும் கலைப்புலி தாணு. இவருடைய படங்கள் எல்லாம் தாறுமாறாக ஹிட் கொடுக்கும். அதிலும் இவர் தயாரிக்கும் படங்களை எல்லாம் பிரம்மாண்டமாக புரமோஷன் செய்வார். அதிலும் கபாலி படத்தின் ப்ரோமோஷனை பிளைட்டில் பண்ணியதை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திற முடியாது.

Also Read: மரணத்தில் முடிந்த 5 காதல் படங்கள்.. தாக்கத்தை ஏற்படுத்திய பருத்திவீரன்

அதனால் தான் அந்த படம் இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் தாறுமாறான வசூலை குவித்தது. மேலும் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தவரே கலைப்புலி தாணு தான். இன்னிலையில் இவர் தயாரித்த விஐபி படத்தில் பிரபு தேவா, அப்பாஸ், சிம்ரன், ரம்பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

இதில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் லைலா தான் கமிட்டாகி இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு எல்லாம் லைலாவை வைத்து துவங்கி விட்டனர். அந்த சமயம் லைலா ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது தயாரிப்பாளர் தாணு அவருடைய மேனேஜரிடம் அட்வான்ஸ் பணத்தை கொடுத்துவிட்டு இருக்கிறார். இதற்கு லைலா நடிகைகளுக்கெல்லாம் உங்கள் தயாரிப்பாளர் வந்து தர மாட்டாரா என்று திமிரு காட்டியிருக்கிறார்.

Also Read: நடிகர்களுக்கு லவ் ஃபெயிலியர் ஆன 5 படங்கள்.. விஜய் கிளைமாக்ஸ் இல் நொறுங்கிப் போன அந்த படம்

‘இந்த பொண்ணு என்ன ஆரம்பத்திலேயே இவ்வளவு திமிராக நடந்து கொள்கிறார். இந்த பொண்ணு நம்ம படத்திற்கு இந்தப் பொண்ணு செட் ஆக மாட்டார்’ என்று லைலாவிற்கு பதிலாக சிம்ரலை மாற்றிவிட்டனர்.  ஆனால் தாணுவை பொறுத்தவரை ஹோட்டலில் சென்று ஒரு நடிகையைப் பார்த்தால். அது வேறு விதமாக கிசு கிசுக்கப்படும் என்பதற்காக தான் அதை தவிர்த்து விட்டார். அதனால் தான் அட்வான்ஸ் பணத்தை மேனேஜரிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

இதை புரிந்து கொள்ளாத லைலாவும் தயாரிப்பாளர் கையில் தான் பணத்தை வாங்க வேண்டும் என்ற ஏடாகூடமான ஆசையால் நல்ல பட வாய்ப்பு இழந்து விட்டார். பணம் எப்படி வந்தால் என்ன! நடிப்பதற்கு சம்பளம் கிடைத்தால் போதும் என்று பேசாமல் லைலா அந்த பணத்தை வாங்கிக் கொண்டு இருந்தால் இவ்வளவு தூரம் பிரச்சனை வந்திருக்காது.

Also Read: ஜோதிகாவால் மொத்த காசையும் இழந்த நடிகை.. அரசனை நம்பி புருசனை கைவிட்ட ஹீரோயின்