நான் நினைச்சா மட்டும் தான் நீ ஜெயிக்க முடியும்.. நட்டாற்றில் நிற்கும் ரஜினியின் வாரிசு

Lal salaam movie audio launch details: ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினி இப்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனா ஒரு படத்தின் பிசினஸ் ஊத்திக்கிறதுக்கும் ஓகோன்னு போறதும் ரஜினி கையில தான் இருக்கு. இந்த விஷயத்தில் இப்போது அவருடைய வாரிசு தான் நட்டாற்றில் நின்று கொண்டு எங்கே போவது என்று தெரியாமல் முழிக்கிறார்.

ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில் ரஜினி தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். இதில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் மாஸ் காட்டினார். இதனால் லால் சலாம் படம் சூப்பர் ஸ்டாரின் படமாகவே பார்க்கப்படுகிறது.

இதில் இவருடன் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். லைக்கா தயாரித்திருக்கும் இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால் இந்த படத்திற்கான சிறப்பு கிளிம்ஸ் வீடியோவை படக்குழு ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியிட்டது.

தற்போது லால் சலாம் படத்தின் ஆடியோ லான்ச் எங்கு நடக்கிறது என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள பிரபல கல்லூரியான சாய்ராம் கல்லூரியில் லால் சலாம் படத்தின் ஆடியோ லான்ச் டிசம்பர் 21ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். விழாவில் ரஜினி கலந்து கொள்வாரா என்பது சஸ்பென்ஸ் ஆகவே இருக்கிறது.

ஆனால் அவர் நினைத்தால் மட்டுமே மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு போக முடியும். ரஜினி மட்டும் இந்த ஆடியோ லான்சுக்கு வந்து தெறிக்க விட்டால், இந்த படத்திற்கு வேறுவிதமான அந்தஸ்து கிடைக்கும். படத்தின் பிசினஸும் தாறுமாறாக எகிறும், எல்லாமே ரஜினி எடுக்குற முடிவுல தான் இருக்கு. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாரை எப்படியாவது ஒத்துக்க வைத்து லால் சலாம் படத்தின் ஆடியோ லான்ச்சுக்கு வர வைக்கப் பார்க்கிறார். கடைசியில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.