Photo Of Vijay Sethupathy With Family: ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கேரக்டர் ரோல், வில்லன் என ரவுண்டு கட்டி வரும் விஜய் சேதுபதி மாதத்திற்கு ஒரு படம் என நடித்து தள்ளிவிடுவார். இப்படி தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பிசியாக இருக்கும் இவரின் நடிப்பில் விடுதலை 2, மகாராஜா ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது.
இவ்வாறு அவர் பிசியாக இருந்தாலும் தன் குடும்பத்துடனும் அவ்வப்போது நேரம் செலவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் தன் மனைவி பிள்ளைகளுடன் எடுத்துக் கொண்ட போட்டோ சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதிலும் இந்த போட்டோ கலர் போட்டோவாக இல்லாமல் கருப்பு வெள்ளையில் இருக்கிறது. அதில் விஜய் சேதுபதி தன் மனைவி தோள் மீது கை போட்டபடி இருப்பதை பார்க்கும்போது செம க்யூட் ஆக இருக்கிறது.
அதே போன்று விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, மகள் பூஜா ஆகியோரும் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளனர். அவ்வப்போது விஜய் சேதுபதியின் குடும்ப புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகும். ஆனால் இந்த முறை கிளாசிக் ஸ்டைலில் வெளியாகி இருக்கும் இந்த போட்டோ அதிக கவனம் பெற்று இருக்கிறது.
இதை பார்த்த விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ரொம்ப க்யூட்டா இருக்கு, கண்ணு பட்டுடும், சுத்தி போடுங்க என கமெண்ட் கொடுத்து வருகின்றனர். மேலும் சூர்யா தற்போது ஹீரோவாக களம் இறங்கிய நிலையில் ஸ்ரீஜா எப்போது ஹீரோயின் ஆகப் போகிறார் எனவும் கேட்டு வருகின்றனர். ஏற்கனவே ஸ்ரீஜா தன் அப்பாவுடன் இணைந்து முகிழ் என்ற படத்தில் நடித்திருந்தார்.