Latha Rajinikanth-Kochadaiyaan: சௌந்தர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான கோச்சடையான் தொடர்பான வழக்கு இன்னமும் விடாமல் துரத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதில் சூப்பர் ஸ்டாரின் மனைவி லதா ரஜினிகாந்த் வசமாக சிக்கியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான அப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. அதற்கு காரணம் மோசமாக இருந்த விஎஃப்எக்ஸ் தான். அதை அடுத்து படத்தை தயாரித்த நிறுவனங்களில் ஒன்றான மீடியா ஒன் குளோபல் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் மீது அபிர்சந்த் நஹாவர் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
அதாவது தயாரிப்பாளர் முரளி கோச்சடையான் படத்திற்காக இவரிடம் 6.2 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார். அதற்கு சூப்பர் ஸ்டாரின் மனைவி உத்தரவாத கையெழுத்தும் போட்டிருந்தார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் பணம் கிடைக்காததால் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் தன்மீது இருக்கும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார். அதில் சில பிரிவுகள் ரத்து செய்யப்பட்டாலும் ஒரு சில பிரிவுகளில் அவர் தொக்காக சிக்கிக்கொண்டார். அதை எடுத்து அவர் கோர்ட்டுக்கு வர வேண்டும் என்ற உத்தரவையும் நீதிமன்றம் சிறப்பித்தது.
ஆனால் அவர் அதற்கு போக்கு காட்டி வந்த நிலையில் சமீபத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதை அடுத்து லதா ரஜினிகாந்த் பெங்களூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். அதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த செய்தி தற்போது திரையுலகில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.