75 வயதில் ரஜினிக்கு ஓய்வு தேவையா.? லதா ஓப்பன் டாக்

Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு தற்போது 75 வயதாகிறது. ஆனால் தற்போதும் அவர் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார்.

அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக நடித்த வேட்டையன் படமும் தோல்வியை தழுவியது. இப்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.

இதற்கு அடுத்தபடியாக நெல்சன் ரஜினியை வைத்து ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார். வயது முதிர்வு காரணமாக இனி ரஜினி ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டார் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.

ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பேசிய லதா

ஏனென்றால் ஜெயிலர் 2 படத்திற்குப் பிறகு ரஜினி எந்த படத்திலும் தற்போது வரை கமிட்டாகாமல் இருக்கிறார். அதோடு அவரது மகள்களும் ஓய்வெடுக்க சொல்லி உள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து சமீபத்தில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் பேட்டி கொடுத்திருக்கிறார். அதாவது ஜெயிலர் 2 படத்திற்கு பிறகும் ரஜினி தொடர்ந்து நடிப்பார் என்று கூறியிருக்கிறார். இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஆகையால் ரஜினி அடுத்து யார் டைரக்ஷனில் நடிக்க போகிறார் என்ற தகவலும் விரைவில் வெளியாக வாய்ப்பிருக்கிறது. 75 வயதை கடந்தும் தனிக்காட்டு சிங்கமாக ரஜினி கர்ஜிக்க இருக்கிறார்.