Actor Ragava Lawrance: ஆரம்பத்தில் நடன இயக்குனராக அறிமுகமாகி படிப்படியாக படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் ராகவா லாரன்ஸ். ஆனால் இவர் நடித்த படங்கள் எதுவும் மக்களிடம் சரியான வரவேற்பை பெறவில்லை. இதனால் கிடைக்கிற வாய்ப்பை தொடர்ந்து பயன்படுத்தி சினிமாவில் பயணித்துக் கொண்டே வந்தார். அப்படிப்பட்ட இவருக்கு பேய் தான் கை கொடுத்தது என்றே சொல்லலாம்.
அதாவது முனி படத்தில் பேயை வைத்து காமெடியாகவும், திரில்லர் ஆகவும் கொடுத்து வெற்றியை அடைந்து விட்டார். அதன் பின்பு இந்த வழியை கெட்டியாக பிடித்துக் கொண்டு தொடர்ந்து பேய் படத்தில் நடித்து வந்தார். அந்த வகையில் இவர் நடித்த முனி மற்றும் காஞ்சனா படங்கள் தொடர்ந்து வெற்றி அடைந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை தேடி கொடுத்தது. இதனால் தொடர் கதையாக காஞ்சனா 1, 2, 3 என்று எடுத்து விட்டார்.
அப்படி பேய் படங்களில் நடித்ததாலோ என்னவோ பேயை விரட்டும் கேரக்டரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் சந்திரமுகி 2வில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுவிட்டார். பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படம் மிகப்பெரிய ஹிட்டானது. அதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார், சிருஷ்டி டாங்கே போன்ற இவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கிறது.
மேலும் இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட லாரன்ஸ், வேட்டையன் கதாபாத்திரத்தில் ரஜினி மிகப் பிரமாண்டமாக நடித்து விட்டார். அதனால் அவரின் பெயரை கெடுக்காதபடி இந்த படம் அமைய வேண்டும் என்ற பயத்தில் மிகவும் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும் இப்படத்தில் இவர் வாங்கிய சம்பள விஷயங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இளம் நடிகர்களாக சினிமாவிற்குள் நுழைந்ததும் அவர்களுடைய சம்பளத்தை இவ்வளவு வேண்டுமென்று டிமாண்ட் செய்து கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் இந்த பழக்கம் லாரன்ஸ் இடம் எப்போதுமே இருக்காதாம். தயாரிப்பாளர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை அப்படியே வாங்கிக் கொள்வாராம்.
அந்த வகையில் இப்படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 27 கோடி என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடிக்கொண்டே வருகிறது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் இவருடைய வெற்றியின் ரகசியமாக பார்க்கப்பட்டு வருகிறது.