Logesh kanagaraj : லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலகட்டத்தில் அனைவராலும் பிரபலமாக பேசக்கூடிய அளவிற்கு வளர்ந்து வந்த இயக்குனர். இவரது இயக்கத்தில் இவர் வெற்றி படத்தை மட்டுமே கொடுத்துள்ளார்.
அந்த அளவுக்கு இவர் படத்தில் பல யுக்திகளை கையாண்டுள்ளார். இவரது படங்களில் எல்லாம் முன்னாள் எடுத்த படத்தின் தொடர்ச்சி இருக்கும். அதனால் இத LCU என்று அழைப்பார்கள். இவர் இவ்வாறு “கைதி”, “விக்ரம்”, “லியோ” படங்கள் ஒரு கதையின் தொடர்ச்சி போல எடுத்து வெற்றிக்கண்டவர்.
லோகேஷ் LCU செய்த 1000 கோடி வசூல்..
கைதி : இந்த படம் ஒரு வித்தியாசமான கதைக்களம். நடிகர் கார்த்தி, சேரன் மற்றும் பலர் நடித்திருப்பார்கள். இந்த படம் இவருக்கு மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படம் 106.80 கோடி வசூலை பெற்றுத்தந்துள்ளது.
விக்ரம் : விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன், “பஹத் பாசில்”, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் இவருக்கு மிகப்பெரும் வெற்றியை தேடித்தந்தது. அதுமட்டுமல்லாமல் கைதி படத்தின் தொடர்ச்சி தான் விக்ரம் படம். இந்த படம் இவருக்கு 417.10 கோடி வசூலை பெற்றுத்தந்தது.
லியோ : லியோ படத்தில் விஜய், திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது. இந்த படமும் விக்ரம் படத்தின் தொடர்ச்சி. இந்த படம் 620.50 கோடி வசூலை பெற்றுத்தந்துள்ளது.
இவ்வாறு LCU வரிசையில் எடுத்த அத்தனை படங்களுமே இவருக்கு நல்ல வரவேற்ப்பையும் நல்ல வசூலையும் பெற்று தந்துள்ளது. இதற்கு அடுத்ததாக இவர் இயக்கு தற்போது கூலி படம் வெளியாக தயாராக உள்ளது. இந்த படமும் தற்போது வெளிவருவதற்கு முன்பே வச்சொல்லை குவித்து வருகிறது.
அடுத்ததாக கைதி-2 படம் ரெடியாகி கொண்டிருப்பதாக தக்வல்கள் வெளியாகி உள்ளன. இந்த படமும் இவருக்கு வெற்றியை பெற்று தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதுவரை LCU வரிசையில் வந்துள்ள படங்கள் 1000 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பது மிகப்பெரிய சாதனை. தொடர்ந்து இந்த சாதனையை தக்க வைத்து கொள்வாரா லோகேஷ் கனகராஜ்.