நா ரெடியா பாடல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த லியோ பட குழு.. புலி பதுங்குறது பாயிறதுக்கு தான்

Actor Vijay In Leo Movie Problem Solved: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இப்படம் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து ரசிகர்கள் இப்படத்தை பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் லோகேஷ் கதை மற்றும் விஜய்யின் நடிப்பு.

அந்த வகையில் விஜய்யின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக “நான் ரெடி தா வரவா” என்ற பாடலை வெளியிட்டு இருந்தார்கள். மேலும் இப்பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 18மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது. அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகமாக அமைந்தது.

ஆனால் எப்பொழுதுமே ஒரு விஷயம் பெருசாக படை எடுக்கிறது என்றால் அதற்கு ஆபத்துகளும் பின்னாலே வரும் என்று சொல்வார்கள். அதேபோலத் தான் இந்த பாடலுக்கு பல பிரச்சினைகள் குறித்து சர்ச்சைகள் பலரும் எழுப்பி வந்தனர்.

அதிலும் எப்படி விஜய் வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டு ஆடலாம், அதனுடைய வரிகள் கூட ரொம்ப மோசமாக இருக்கிறது என்று பிரச்சனைகள் பூகம்பகமாக வெடித்தது. இவ்வளவு பெரிய நடிகராக இருந்துட்டு வருங்கால சமுதாய இளைஞர்களை தூண்டி விடும் விதமாக பாடல்கள் இருக்கிறது என்று நாலா பக்கமும் பிரச்சனை கிளம்பியது.

அத்துடன் இவருக்கு சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருப்பதால் அவர்களுக்கு நல்வழியை சொல்லிக் கொடுக்காவிட்டாலும், இந்த மாதிரியான பாடல்களை வைத்து அவர் கெடுத்து விடாதீர்கள் என்று இவர் மேல் புகார் கொடுக்கும் அளவிற்கு சென்று இருக்கிறது.

ஆனால் அதையெல்லாம் சரி செய்தும் விதமாக இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது லியோ படக்குழு. அதாவது இப்பாடல் இடம் பெறும் பொழுது அதற்கு கீழே டிஸ்கிளைமர் போட்டுவிட்டார்கள். அதில் “புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரைக் கொல்லும்” என்ற வசனம் வரும்படி இடம் பெற்று வருகிறது. இதனால் சட்ட ரீதியாக எந்த பிரச்சினையும் இனிமேல் விஜய் எதிர்கொள்ள தேவையில்லை.