வாரிசு படத்திற்கு பிறகு விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், கிளைமாக்ஸ் காட்சிகள் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர். அதிலும் தற்போது தான் விஜய்- அர்ஜுன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் ஓகே சொன்ன கதையில் அர்ஜுன் நடித்து ஹிட் கொடுத்திருப்பதை அந்த படத்தின் இயக்குனர் சமீபத்திய பேட்டி ஒன்றில் போட்டுடைத்துள்ளார்.
தற்போது கமர்ஷியல் கிங்காக இருக்கும் விஜய் முதலில் குடும்ப ஆடியன்ஸை கவர்வதற்காகவே ஃபேமிலி சப்ஜெக்ட்டை எடுத்து நடித்து வந்தார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து ஆக்சன், நடனம், எமோஷனல், காமெடி என எதைக் கொடுத்தாலும் அதில் பிச்சு உதறினார்.
அதிலும் ரஜினிக்கு பிறகு விஜய்யின் காமெடி தான் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அப்படி காமெடி நிறைந்த படம் ஒன்றின் கதையை விஜய் கேட்டு அதை ஓகே சொல்லிவிட்டார். அதுதான் மருதமலை படத்தின் கதை. அந்த சமயத்தில் விஜய் வேறொரு படத்தில் கமிட் ஆனதால் இரண்டு படங்களின் கால் சீட் ஒரே நேரத்தில் அமைந்துவிட்டது.
அதன் பிறகு தான் அந்த படத்தில் அர்ஜுன் கமிட் ஆகி சூப்பர் ஹிட் கொடுத்தார். இந்த படத்தை சுராஜ் இயக்கினார். இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். மருதமலை திரைப்படமும் முழுக்க முழுக்க காமெடிக்கு பஞ்சம் இல்லாத படமாக அமைந்தது. இதில் அர்ஜுன்- வடிவேலு காம்போ பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும். நிச்சயம் அதில் விஜய் நடித்திருந்தால் இதைவிட இன்னும் ஹிட் ஆகியிருக்கும்.
இருப்பினும் மருதமலையில் அர்ஜுன் தன்னுடைய முழு காமெடி திறமையையும் காட்டியிருப்பார். பெரும்பாலும் சுராஜ் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும். இவர் தனுஷின் படிக்காதவன் படத்தையும் இயக்கியிருப்பார். அதேபோல வடிவேலு ரீ -என்ட்ரி கொடுத்த நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற காமெடி படத்தையும் இயக்கினார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.