லோகேஷ் மீது கடும் கோவத்தில் லியோ வில்லன்.. என்ன இருந்தாலும் இப்படி பண்ணிருக்க கூடாது

Lokesh: மாஸ்டர் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஜய் லோகேஷ் இணைந்து லியோ என்ற ஹிட் படத்தை கொடுத்தனர். அதன் பார்ட் 2 வருமா வராதா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இன்னும் தீரவில்லை.

விஜய் ஜனநாயகன் படத்தோடு சினிமாவுக்கு குட் பை சொல்கிறார். அதனால் லியோ 2 சாத்தியமா என்பது லோகேஷ் கையில் தான் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது லியோ வில்லன் சஞ்சய் தத் லோகேஷ் மீது கோபமாக இருப்பதாக கூறியுள்ளார்.

லியோவில் விஜயின் அப்பாவாக இவர் வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தார். இவர் படத்தில் நடிக்க இருக்கும் செய்தியே அப்போது மிகப்பெரும் எதிர்பார்த்தை ஏற்படுத்தி இருந்தது. அப்படிப்பட்டவர் ஏன் லோகேஷ் மீது கோபப்பட வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம்.

லோகேஷ் மீது கடும் கோவத்தில் லியோ வில்லன்

அதற்கான காரணத்தையும் அவர் சொல்லி இருக்கிறார். முதலில் தளபதி விஜய் உடன் பணியாற்றியது எனக்கு சந்தோஷம். எனக்கு அது ரொம்பவும் பிடித்திருந்தது. ஆனால் லோகேஷ் மீது எனக்கு கோபம் இருக்கிறது.

ஏனென்றால் இந்த படத்தில் எனக்கு அவர் பெரிய கதாபாத்திரம் கொடுக்கவில்லை. என்னை வீணடித்து விட்டார் என சிரித்தபடி கூறியுள்ளார். அந்த வீடியோ கிளிப் தற்பொழுது வைரலாகி வருகிறது.

அதேபோல் ரசிகர்கள் ஆமா சஞ்சய் தத் சொல்றதும் சரிதான். என்ன இருந்தாலும் லோகி இப்படி பண்ணிருக்கக் கூடாது. ஒரு பெரிய மனுஷன கூட்டிட்டு வந்து இப்படியா பண்றது என கலாய்த்து வருகின்றனர்.