தயாரிப்பாளர் மற்றும் வேல்ஸ் யுனிவர்சிட்டி நிறுவனத்தின் சேர்மன் ஐசரி கணேஷ் மகளுக்கு இந்த வாரம் திருமணம் நடக்க உள்ளது. நடக்கப் போகும் இந்த திருமணம் தான் கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக். தனது ஒரே மகள் பிரீத்தாவிற்காக கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்துள்ளார் ஐசரி கணேஷ்.
ஈ சி ஆர் இல் உள்ள பழைய டிரைவின் தியேட்டர் பிரார்த்தனா. அங்கேதான் இந்த திருமண ரிசப்ஷனுக்காக 30 கோடி செலவு செய்து செட் போட்டுள்ளார் ஐசரி கணேஷ். இது வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டும்தான். கல்யாணம் அதே ரோட்டில் உள்ள ஆர்கே மஹாலில் நடைபெற உள்ளது.
சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு பத்திரிக்கை கொடுத்துள்ளார். அவரது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் 8000 பேர் இருக்கின்றனராம் அவர்களை தவிர இன்னும் 3 ஆயிரம் பேர் அந்த இடத்தில் கூட உள்ளனராம். இதனால் தான் இந்த பிரம்மாண்ட ஏற்பாடு.
இதுபோக ஆதரவற்றோர்கள், வயதான பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என எல்லோருக்கும் இந்த கல்யாண நிகழ்ச்சியில் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு கல்யாணம் நடக்கும் மண்டபத்தில் உணவு பரிமாற இருக்கிறார்கள். ஐசரி கணேசன் விருப்பப்படி இந்த கல்யாணம் நடக்கிறதாம்.
அதுவும் போக அவரது மகள் ப்ரீத்தாஆசைப்படி மால்தீவ் தீவுகளிலும் கல்யாணம் நடக்க இருக்கிறதாம். அதற்காக தனி சார்டட் பிளைட்டில் சுமார் 250பேர் அங்கே புறப்படுகிறார்கள். அதற்காகவும் பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டு, முக்கியமான விருந்தாளிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே நடிகர் நெப்போலியன் தன் மகனுக்கு ஜப்பானில் வைத்து கப்பலில் திருமணம் நடத்தி கோலாலமாக கொண்டாடினார். அவருக்கு போட்டியாக இப்பொழுது ஐசரி கணேஷும் தனது ஒரே மகளான பிரீத்தாவின் திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளார். மாப்பிள்ளை ஒரு ஆர்கிடெக்ட்டாம். மிடில் கிளாஸ் ஆளான அவரின் குணத்தை பார்த்து ஐசரி கணேஷிற்கு பிடித்து போய்விட்டதாம்.