Actor Jayam Ravi: ஜெயம் ரவி எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் இல்லையென்றால் தலை தப்பாது என்ற முடிவில் இருக்கிறார். ஏனென்றால் சமீபகாலமாக அவருடைய படங்களை எடுத்துக் கொண்டால் பொன்னியின் செல்வன் படத்தை தவிர்த்து பெரிய ஹிட் எந்த படமும் தற்போது வரை கொடுக்கவில்லை.
ஆகையால் இப்போது சைரன் மற்றும் இறைவன் போன்ற படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். அதில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு மிகப்பெரிய ஹிட் படம் என்றால் தனி ஒருவன்.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. அந்தப் படத்திலும் ஜெயம் ரவி வித்யாசமான இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதேபோல் சைரன் படமும் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறாராம்.
அந்த வகையில் ஆக்ரோஷமான குணம் கொண்டவராக ஒரு கதாபாத்திரமும் மற்றொன்று மிகவும் எதார்த்தமான இளமை வாய்ந்த கதாபாத்திரமுமாக இருக்கிறது. இந்த இரண்டு கதாபாத்திரங்களுமே சந்திக்கும்படியான காட்சி சைரன் படத்தில் எடுக்கப்பட்டு வருகிறதாம். மேலும் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளும் உள்ளனர்.
அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. சைரன் படத்திற்கு கூடுதல் பலமாக ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
கண்டிப்பாக சைரன் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுப்பேன் என்ற நம்பிக்கையில் ஜெயம் ரவி இருக்கிறார். நேற்று இவரின் பிறந்த நாளை முன்னிட்டு சைரன் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இதை வைத்து பார்க்கும் போது சைரன் கண்டிப்பாக ஹிட் கொடுக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.