சூப்பர் ஸ்டாரை மிஞ்ச எவராலும் முடியவில்லை.. உலக அளவில் வசூலை வாரி குவித்த 6 தமிழ் படங்கள்

List of Highest box office collection tamil movies: இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு சிறப்பான வருடம் என்றே சொல்லலாம். பல படங்கள் வெளிவந்து வசூலில் தன்னிறைவு அடைந்தது. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் வெளுத்து வாங்கிய படங்களின் தொகுப்பு இதோ,

ஜெயிலர்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் வசூலில் 650 கோடி குவித்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. பல்வேறு திருப்பங்கள் உடன் ஆக்சன் பிக்சராக களம் இறங்கிய ஜெயிலரின் முதல் நாள் வசூல் மட்டுமே 50 கோடியை தாண்டியது.

லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, கௌதம், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த லியோ உலக அளவில் வசூலில் 514 கோடியை வாரி குவித்தது. இப்படத்தில் விஜய்யை அமைதியான தந்தையாகவும் அதிரடியான மகனாகவும் இரு வேறு கோணங்களில் பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன் 2: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழகத்தின் தவிர்க்க முடியாத மன்னனான ராஜராஜ சோழனின் கதையை கருவாகக் கொண்ட பொன்னியின் செல்வன் வசூலில் உலக அளவில் 345 கோடியை எட்டியது. மணிரத்தினம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்க ஜெயம் ரவி ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு:தந்தை சொல் கேட்காத மகன் தந்தைக்கு பிறகு குடும்பம் மற்றும் தொழில் இரண்டையும் எவ்வாறு நிலை நிறுத்தினார் என்பதை கருவாகக் கொண்டு வெளிவந்த குடும்ப திரைப்படம். வாரிசு வசூலில் 300 கோடிக்கு மேல் சாதனை செய்தது. விஜய் சரத்குமார், ராஷ்மிகா மந்தனா என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து இருந்தனர்.

துணிவு:  மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களின் ஆசையை தூண்டி ஏமாற்றிய வங்கிகளின் முகத்திரையை துணிச்சலுடன் கிழித்த அஜித்தின் துணிவு உலக அளவில் வசூலில் 200 கோடியை தாண்டியது போனி கபூர் தயாரிக்க எச் வினோத் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாத்தி:வியாபார நோக்கில் செயல்படும் கல்வியை கருவாகக் கொண்டு வெளிவந்த வாத்தி திரைப்படம் வசூலில்100 கோடியை எட்டியது. வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் நடித்த  இப்படம் சமூக கருத்தை வலியுறுத்தி குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைந்தது.