Logesh kanagaraj : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களை தமிழ் சினிமாவில் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவர் இயக்கத்தில் வெளிவந்தது குறைந்த படங்களே ஆனாலும் அந்த படங்கள் பெற்று தந்த புகழ் அப்படி.
இவர் மாநகரம் படம் மூலம் திரையுலகிற்கு வந்திருந்தாலும், அடுத்ததாக கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர். மற்றும் இவர் இயக்கத்தில் தனி யூனிவெர்சயே உருவாக்கினார். அனைத்து படத்திலும் தொடர்ச்சி என்பது இருந்தது.
இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் கூலி படம் வரும் ஆகஸ்ட் 14, 2025 அன்று திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தில் நிறைய திரை பிரபலங்கள் நடித்து மேலும் இப்படத்திற்கு சிறப்பை தேடி கொடுத்திருக்கின்றனர்.
இந்த படம் திரைக்கு வருவதற்க்கு முன்பே மக்களிடையே மற்றும் திரையுலகில் நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. இதை சிலர் லோகேஷ் கனகராஜ்க்கு அதிர்ஷ்டம் என்று கூறினாலும். அவர் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் கூறியதாவது.
ரஜினிக்காக லோகேஷ் செய்த சம்பவம்..
2 வருடம் என் வயது 36, 37 எப்படி போனது என்றால் அதில் மொத்தமும் கூலி படம் மட்டும்தான். என் குடும்பம், சுப நிகழ்ச்சிகள், ப்ரண்ட்ஸ் என எதிலுமே நான் கவனம் செலுத்தவில்லை எனவும். திரும்பி பார்க்கையில் 2 வருடம் முழுவதும் நான் கூலி படத்தின் வேலையே மட்டும்தான் பார்த்து கொண்டிருக்கிறேன் என தெரிந்தது என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் வெறித்தனமாக வேலை செய்வதை பற்றி நிறைய பேர் கூறியுள்ளனர். குளிக்காமல், உறங்காமல் வேலை பார்த்தார் என பிரபலங்கள் கூறியுள்ளனர். இதிலிருந்து இவர் அதிர்ஷ்டத்தில் முளைத்தவர் அல்ல, தன் கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர் என்பது அனைவருக்கும் தெள்ள தெளிவாக புரிகிறது.
ரஜினி சார்க்காக இறங்கி சம்பவம் பன்னிருக்கார் போல லோகேஷ் கனகராஜ் அப்படினு சொல்ற அளவுக்கு தன்னோட ஈடுபாட்டை காமிச்சுருக்காரு லோகேஷ். அதனால் தான் என்னமோ கஷ்டபட்டத்துக்கு கூலி கொடுத்து கொண்டிருக்கிறது கூலி.