எல்லாமே ஒரிஜினலாம்.. கூலிக்காக ரொம்ப மெனக்கெட்ட லோகேஷ்

Logesh kanagaraj : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் தற்போது வெளிவரவிருக்கும் படம் தான் கூலி. இது திரைக்கு வெளிவருவதற்கு முன்பே, இதைப்பற்றி எதிர்பார்க்கும்,வரவேற்ப்பும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது என்று தான் கூற வேண்டும்.

ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட், ஒவ்வொரு அப்டேட், ஒவ்வொரு பாடலாக ரிலீஸ் என அடுத்தடுத்து தனது பிரமோஷனை சரியான முறையில் செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஒரு நல்ல தொழில் என்பது விளம்பரத்தைப் பொறுத்துதான் அமையும் என்பதை தெள்ள தெளிவாக தெரிந்த ஒரு இயக்குனர் லோகேஷ்.

அவ்வாறு இவர் கூலி படம் ரிலீஸ் ஆகும் தேதி வரைக்கும் தனது அடுத்தடுத்த திட்டத்தை, கூலி படத்தின் ஹைப் குறையாமல் இருக்க அடுத்தடுத்த சின்ன சின்ன அப்டேட் கொடுத்து கூலி படத்தை பார்ப்பதற்கு மக்களை தயார் படுத்தி வருகிறார் லோகேஷ்.

கூலி படத்தின் ஏகப்பட்ட அப்டேட்டுகள் வந்து நம்மை ஏற்கனவே இந்த படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்கிற நிலைமைக்கு தள்ளி இருக்கிறது. இத்துடன் நிறுத்த மாட்டார்கள் போல இதற்கு அடுத்தும் பெரிய பெரிய சம்பவங்களை செய்வார் லோகேஷ் என திரை வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுகின்றன.

எல்லாமே ஒரிஜினலாம்..

இது ஒரு PAN இந்தியா திரைப்படம் என்பதால் இதன் விளம்பரமும் அந்த அளவுக்கு இருக்கிறது. தற்போது நமக்கு கிடைத்திருக்கும் அப்டேட் என்னவென்றால் கூலி படம் நிறைய படக்காட்சிகள் ஒரிஜினல் லொகேஷனில் எடுக்கப்பட்டதாம். ஒரு சில காட்சிகள் மட்டும் கிரீன் மேட்டில் காட்சியாக்கப்பட்டு இருக்கிறது.

கூலிக்காக ரொம்ப மெனக்கெட்ட லோகேஷ்..

அதுமட்டுமல்லாமல் நிறைய டூப் போட்டு இந்த படம் தயாரித்ததால் அதிக அளவில் ஒரிஜினல் லொகேஷனை தயாரிக்க முடிந்தது போல என்கிறவாறு திரை வட்டாரங்களில் பேச்சுக்கள் இழந்த வண்ணம் இருக்கின்றன. நாம் என்னதான் தொழில்நுட்பத்தை கையாண்டிருந்தாலும், இயற்கையோடு கலந்து ஒன்றி வர கூடிய படம் மக்கள் மனதில் சீக்கிரம் போய் பதிந்து விடும் என்பதை உண்மை.

இந்த யுக்தியையும் லோகேஷ் கனகராஜ் அவர்கள் கையாண்டு இருக்கிறார். எனவே படம் கண்டிப்பாக வெற்றி அடைய தான் போகிறது என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. இவ்வாறு கூலி படத்திற்காக மிகவும் மெனக்கெட்டு ஒரிஜினல் லொகேஷன் உங்களைத் தேர்வு செய்து படத்தை தயாரித்திருக்கிறார் லோகேஷ்.