ஸ்ரீயை மீட்ட லோகேஷ்.. இப்போ எப்படி இருக்காரு தெரியுமா.?

Lokesh Kanagaraj : கடந்த சில நாட்களாகவே இணையத்தில் மிகவும் வைரலான விஷயம் ஸ்ரீ தான். மாநகரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இவர் உடல் மெலிந்தபோய் காணப்பட்டார். அதோடு அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

ஏனென்றால் அவர் போடும் பதிவும் அவ்வாறு தான் இருந்தது. இந்த சூழலில் காலை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளத்தில் கண்டுபிடித்து விட்டதாகவும் கூறியிருந்தார். மேலும் அவரைப் பற்றி எந்த தவறான செய்திகளும் ஊடகங்களில் பதிவிட வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சூழலில் கூலி படப்பிடிப்பில் லோகேஷ் பிஸியாக இருந்து வருகிறார். ஆனால் ஸ்ரீயை பற்றி செய்தி வெளியான உடனே அவரைத் தேடும் முயற்சியில் லோகேஷ் மற்றும் அவரது குழு இறங்கி இருக்கிறது.

ஸ்ரீயை மீட்டுக் கொண்டு வந்த லோகேஷ்

அப்படிதான் ஸ்ரீ டெல்லியில் இருக்கும் விஷயம் தெரியவந்தது. இதை அடுத்து கார் மூலமாக டெல்லியில் இருந்து ஸ்ரீ சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். பெரிய மருத்துவமனையில் அவருக்கு இப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.

இப்போது மிகப்பெரிய உயரத்தில் லோகேஷ் இருந்தாலும் முதலில் அவரை இயக்குனராக அடையாளம் காட்டப்பட்டது ஸ்ரீயின் படம் தான். அதோடு அந்த படத்தில் இருந்து இவர்களது நட்பு நன்றாக இருந்து வந்துள்ளது.

இப்படி இருக்கும் சூழலில் ஸ்ரீ காணாமல் போனதிலிருந்தே அவரது குடும்பமும் மிகுந்த மன வேதனையில் இருந்திருக்கிறது. இது முன்கூட்டியே தெரிந்திருந்தால் லோகேஷ் அப்போதே அவரை இந்த மோசமான நிலைக்கு சென்றிருக்க விட்டிருக்க மாட்டார்.