கூலி படத்தை சொன்ன தேதிக்கு முன்பாகவே ஸ்கெட்ச் போட்டு முடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவரது ஒர்க்கை பார்த்து மொத்த யூனிட்டும் பிரமித்து போய் வருகிறது. குறிப்பாக நடிக்கும் ஆர்ட்டிஸ்ட்களின் டேட்டுகளை மிஸ் ஆகாமல் பயன்படுத்தி வருகிறார்.
லோகேஷின் கடைசி படமான லியோவில் விட்டதை கூலி படத்தில் பிடித்தாக வேண்டுமென நெருப்பாய் வேலை செய்து கொண்டிருக்கிறார். லியோ படத்தில் அவருக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் வந்தது. படத்தின் இரண்டாம் பாதி நல்லா இல்லை என நேரடி விமர்சனங்கள் வந்தது.
விஜய்யின் அப்பா சந்திரசேகர் லோகேஷிடமே செகண்ட் ஆப் நல்லா இல்லை என நேரடியாக கூறிவிட்டாராம். அது மட்டும் இல்லாமல் விஜய்க்கு போன் செய்த லோகேஷ்க்கு அவரிடம் இருந்தும் சரியான பதில் கிடைக்கவில்லையாம். அந்த படத்திற்கு காஷ்மீர் ஷூட்டிங்கில் நிறைய பிரச்சனையை சந்தித்தாராம்.
அதிலிருந்து தெளிவான லோகேஷ் கூலி படம் ஆரம்பிப்பதற்கு முன்பு சன் பிக்சர்ஸ் இடம் நிறைய கண்டிஷன்கள் போட்டு உள்ளார். தனக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது, படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யக்கூடாது, தனக்கு முழு சுதந்திரம் வேண்டும் என்பது போன்றவற்றை லோகேஷ் ஆரம்பத்திலேயே தெளிவாக கூறிவிட்டாராம்.
அதற்கு ஏற்றார் போல் சன் பிக்சர்ஸ் அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. ஆனால் அமீர் கான் மட்டும் படத்தில் உள்ள ரகசியங்களை போட்டு உடைத்து வருகிறார். படத்தில் தான் 8 நிமிடம் வருவதாகவும் கூறியுள்ளார். இது லோகேஷ்க்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. ஒரு பெரிய நடிகரிடம் போய் படத்தை பற்றி வெளியில் சொல்லாதீர்கள் என கூறுவதற்கு சங்கோஜத்தை ஏற்படுத்தி வருகிறது.