அடுத்த ஹீரோயினை உறுதி செய்த லோகேஷ்.. வேகமெடுக்கும் தளபதி 67

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து படம் இயக்க இருக்கிறார். இந்த படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருட இறுதியில் இதன் படப்பிடிப்பு ஜோராக ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் அந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு இந்த படத்தில் இணைவதற்குள் லோகேஷ் மற்ற நட்சத்திரங்களின் தேர்வை முடித்துவிட இருக்கிறார். அந்த வகையில் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்கள் இணைய இருக்கின்றனர்.

மேலும் விஜய்யுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த நடிகை திரிஷா 14 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. அதை மேலும் அதிகரிக்கும் விதமாக தற்போது மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.

அதாவது இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றொரு ஹீரோயினாக தேர்வாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஏற்கனவே இவர் விஜய்யுடன் இணைந்து சர்க்கார், பைரவா ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகும் கூட கீர்த்தி சுரேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டார்.

அந்த முயற்சியின் பலனாகத்தான் தற்போது அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது கிட்டத்தட்ட உறுதியான தகவல் தான் இன்று கூறப்படுகிறது. ஏனென்றால் லோகேஷ் இந்த இரண்டு நடிகைகளையும் இப்போது ட்விட்டர் தளத்தில் பாலோ செய்ய ஆரம்பித்துள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல் படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கிறதாம். இதனால் விஜய்யின் ரசிகர்கள் தற்போது பயங்கர குஷியில் இருக்கின்றனர். கூடிய விரைவில் தளபதி 67 திரைப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.