Director Lokesh: லோகேஷ் படத்தில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக மிகப்பெரிய இடத்திற்கு செல்லலாம் என பல நடிகர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் லோகேஷ் படத்தில் நடித்த வில்லன் ஒருவர் தனது பெயரைக் கெடுத்துக் கொள்ளும் விதமாக விஷயங்களை பேசி இருக்கிறார்.
அதுவும் குறிப்பாக நடிகைகளை பற்றி அநாகரீகமாக பேசி இருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதாவது நடிகைகள் பட வாய்ப்பு பெறுவதற்கு காரணம் ஹீரோக்களுடன் படுக்கையை பகிர்வதால் தான் என்று பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் லோகேஷ் பட வில்லன்.
லோகேஷ் தற்போது லியோ படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. இதில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் நடிக்கிறார். மிகவும் சர்ச்சையான நடிகராக பார்க்கப்படும் இவர் சமீபத்தில் 300 நடிகைகளுடன் உறவில் இருந்ததாக அவரை கூறியிருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில் ஹீரோக்கள் பெரிய நடிகர்களாக வேண்டுமென்றால் அவர்கள் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் சண்டைக் காட்சிகளிலும் சில சமயங்களில் விபத்து ஏற்படும். அவர்களுடைய கடின உழைப்பின் காரணமாக மட்டுமே தான் மேலே வர முடியும்.
ஆனால் நடிகைகளை பொருத்தவரையில் எதுவுமே தேவை இல்லை. தாராள கவர்ச்சி காட்டினாலே பட வாய்ப்பு குவிந்து விடும். அதோடு மட்டுமல்லாமல் பெரிய ஹீரோக்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால் அவர்களே நடிகைகளுக்கு பெரிய படத்தில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறார்கள்.
இதனால் ஹீரோக்கள் போல அவர்கள் எந்த கஷ்டமும் பட தேவை இல்லை என சஞ்சய் தத் கூறி இருக்கிறார். இதை 1993 ஆம் ஆண்டு பிரபல இதழ் ஒன்றுக்கு சஞ்சய் பேட்டி கொடுக்கும் போது கூறி இருக்கிறார். ஆனாலும் நடிகைகளை பற்றி இவர் இவ்வாறு மோசமாக பேசியது இப்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்து இருக்கிறது.