லோகேஷின் விக்ரம் பாணியில் பல நட்சத்திரங்கள் நடிப்பில் லியோ படம் உருவாகி வருகிறது. விஜய், திரிஷா, அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் மற்றும் பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். லியோ படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது.
இந்நிலையில் ஹைதராபாத் செட்டியூலை விஜய் கேன்சல் செய்து விட்ட நிலையில் இப்போது லியோ படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையில் நடைபெற்று வருகிறது. அதாவது விஜய்யின் வீடு மற்றும் பிரசாந்த் ஸ்டூடியோவில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்த இருக்கின்றனர்.
மேலும் லியோ படத்தின் படப்பிடிப்பு விரைந்து முடித்து இறுதிகட்ட வேலைகள் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் இன்னும் 40 நாள் சூட்டிங் பாக்கி இருக்கிறதாம். அதாவது லியோ படபிடிப்பு தாமதமாவதற்கு வில்லன் நடிகர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கிறார்.
மேலும் அர்ஜுன் நடிப்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமே புகைப்படத்துடன் வெளியிட்டது. ஆனால் அர்ஜுன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத காரணத்தினால் லியோ படத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
ஆனால் அர்ஜுனின் போஷன் இன்னும் தொடங்கவில்லையாம். லியோ படத்திற்கு அர்ஜுன் 40 நாள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார். ஆகையால் இன்னும் லியோ படத்தில் 40 நாள் தாண்டி படப்பிடிப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் அர்ஜுனால் லியோ படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது.
இதனால் லோகேஷ் தலைவலியில் உள்ளாராம். இதிலிருந்து காஷ்மீர் படப்பிடிப்பில் அர்ஜுன் கலந்து கொள்ளாததால் அவரது காட்சிகள் மிக கம்மியாக இருக்கும் என தெரிகிறது. மேலும் சென்னையில் நடக்க உள்ள படப்பிடிப்பில் அர்ஜுன் பங்கு பெறுவார் என எதிர்பார்க்கலாம். லியோ படத்தை பற்றிய அப்டேட் அடுத்து அடுத்து வெளியாக உள்ளது.