நட்புக்காக ரூட்டை மாற்றிய லோகேஷ்.. அடுத்ததாக எடுக்கப் போகும் புது அவதாரம்

லோகேஷ் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் லியோ திரைப்படம் தான் இப்போது கோலிவுட்டின் பரபரப்பு செய்தியாக இருக்கிறது. எங்கு திரும்பினாலும் இப்படத்தைப் பற்றி தான் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த அளவுக்கு லோகேஷ் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார். இது ஒரு புறம் இருந்தாலும் அவர் தன்னை நம்பியவர்களுக்காகவும், தன் நட்பு வட்டாரத்திற்காகவும் சில விஷயங்களை செய்து வருகிறார். அதில் ஒன்றுதான் தற்போது அவர் எடுத்திருக்கும் நடிகர் என்ற அவதாரம்.

இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். அதாவது லோகேஷ் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பு, அறிவு இயக்க இருக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார். ரொம்பவும் புகழ்பெற்ற பயிற்சியாளர்களான இவர்கள் தான் இப்போது பிரம்மாண்ட திரைப்படங்கள் அனைத்திற்கும் சண்டை பயிற்சி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் இவர்கள் லோகேஷின் பல திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சி அளித்துள்ளனர். அதிலும் விக்ரம் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த சண்டை காட்சிகள் இவர்களுக்கு பெரும் புகழை தேடிக்கொடுத்தது. அதை தொடர்ந்து தற்போது லியோ படத்திற்காகவும் இவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அந்த நட்பின் அடிப்படையில் தான் லோகேஷ் இவர்கள் இயக்கும் படத்தில் நடிக்க சமதித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஏற்கனவே அன்பு, அறிவு இருவரும் இணைந்து லாரன்ஸ் நடித்த ஒரு திரைப்படத்தை இயக்கினார்கள்.

ஆனால் அவர்களுடைய இயக்கம் பிடிக்கவில்லை என்று லாரன்ஸ் கூறியதால் அந்த படம் இப்போது கிடப்பில் கிடைக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு உறுதுணையாக லோகேஷ் மற்றும் அனிருத் இணைந்திருப்பது அனைவரின் ஆர்வத்தையும் தூண்டி இருக்கிறது. தற்போது இயக்குனர்கள் அனைவரும் நடிப்பில் கவனத்தை திருப்பும் நிலையில் லோகேஷும் அதில் இணைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.