விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்திற்கு அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் அனைத்தையும் லோகேஷ் முழுமூச்சாக செய்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.
ஆனால் அதில் தான் தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியாமல் இருக்கிறது. படத்தில் இரண்டு சண்டை காட்சிகள் மற்றும் ஒரு பாடல் காட்சி பாக்கி இருக்கிறதாம். இதனால் அந்த படத்தின் சூட்டிங் இன்னும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் லோகேஷ் விஜய் 67 திரைப்படத்திற்கான சூட்டின் வேலைகளை பம்பரமாக சுழன்று பார்த்துக் கொண்டிருக்கிறாராம். இன்னும் 20 நாட்களுக்குள் இந்த படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்க முடிவு செய்திருக்கும் லோகேஷ் தற்போது அதற்கான லொகேஷன்களையும் பார்த்து வைத்துள்ளார்.
அதன்படி காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள பையனூர் என்ற இடத்தில் தான் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இதற்காக அங்கு ஒரு பிரம்மாண்ட செட்டும் போடப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த விஷயம் இப்போது வரை விஜய்க்கு தெரியாதாம்.
பெப்சி அமைப்பு திரைப்பட சங்கத்திற்காக பையனூரில் சுமார் 30 ஏக்கர் அளவிற்கு நிலத்தை வழங்கி இருக்கிறது. அங்குதான் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. தற்போது செட் போடப்படும் பணிகள் எல்லாம் கிட்டத்தட்ட முடிவுறும் தருவாயில் இருக்கிறது.
அந்த வகையில் இந்த படத்திற்காக ரகசியமாக காய் நகர்த்தி வரும் லோகேஷ் கனகராஜ் இனிமேல் தான் இது பற்றி விஜய்யிடம் கூற இருக்கிறாராம். இப்படி ஒரு தில்லாலங்கடி வேலையை பார்த்து வைத்துள்ள அவரை விஜய் என்ன சொல்ல போகிறார் என்பதைக் காண பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.