80ஸ் நடிகருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் லோகேஷ்.. கைதி விக்ரம் படத்தில் இருக்கும் ரகசியம்

நான் இயக்கும் படத்தில் நடிகர் மன்சூர் அலிகானை கண்டிப்பாக நடிக்க வைப்பேன் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார் . நடிகர் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாஸ் ஹிட்டான நிலையில் இத்திரைப்படத்தை குறித்து பல பேட்டிகளில் லோகேஷ் கனகராஜ் பேசி வருகிறார்.

அப்போது ஒரு பேட்டியில், நீங்கள் நடிகர் மன்சூர் அலிகானின் ரசிகனாக இருப்பதற்கு காரணம் என்ன என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகானின் ஆட்டிட்யூட் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவர் எப்போதுமே எதார்த்தமாக இருக்கும் நபராக உள்ளார் என தெரிவித்தார்.

மேலும் அவ்வளவு பெரிய வில்லனாக இருக்கும் மன்சூர் அலிகான், ஒரு பேட்டியின் போது, அவரிடம் கேள்விக்கேட்கப்பட்டது, அப்போது கேள்விக்கு பதிலளிக்காமல்,பக்கத்தில் உள்ள இலையை எடுத்து வாயை துடைப்பது, இலையை மென்னு தின்னுவது, இலையை சுருட்டி பீப்பி ஊதுவது என அவருக்கு தோன்றுவதை எதார்த்தமாக செய்வார். இப்படி அவர் செய்யும் செயலை பார்ப்பதற்கே எனக்கு சந்தோசமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அதனால் தான் அவரை முதன் முதலில் கைதி படத்தில் நடிக்க மன்சூர் அலிகானை தேர்வு செய்தாகவும், அந்த அளவுக்கு அவரை எனக்கு பிடிக்கும் என ஒரு ரசிகனாக மாறி லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அவரின் நினைவாகத்தான் விக்ரம் படத்தில் அவர் நடித்த அசுரன் திரைப்படத்தில் வெளியான சக்கு சக்கு பாடலை ஒரு முக்கியமான காட்சியில் வைத்திருந்தேன்.

மேலும் ஏன் அந்த குறிப்பிட்ட பாடலை இந்த படத்தில் வைக்கிறீர்கள் என கமலஹாசனும் தன்னிடம் கேள்வி கேட்டார் என்றும் அதற்கு நான் அந்த பாடல் தான் இப்படத்தின் உங்களுக்கு ஒரு துருப்புச் சீட்டாக அமையும் என்றும், மேலும் மன்சூர் அலிகானின் நினைவாக இக்குறிப்பிட்ட பாடலை வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் பெருந்தன்மையான இயக்குனர் என்ற பெயரை ரசிகர்களிடமும், கோலிவுட் வட்டாரத்திலும் பெற்றுள்ளார் .இதனிடையே தற்போது மார்க்கெட் இல்லாத நடிகர் மன்சூர் அலிகான் மீது இவ்வளவு தீவிர ரசிகனாக இருக்கும் லோகேஷ் கனகராஜை அனைவரும் வியந்து பார்க்கின்றனர்.மேலும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கண்டிப்பாக மன்சூர் அலிகான் நடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.