கூலி ரிசல்ட்டுக்கு பின் லோகேஷ் கனகராஜின் சம்பளத்தில் வந்த சரிவு.. கைதி 2க்கு தயாரிப்பாளருடன் வந்த சலசலப்பு

லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குவதற்கு 50 கோடிகள் சம்பளம் வாங்கி உள்ளார். எப்பொழுதுமே பட்ஜெட் விஷயத்தில் கரார் காட்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் லோகேஷ், ரஜினி கூட்டணி என்பதால் கூலி படத்திற்கு சம்பளத்தை வாரி இறைத்தது.

மாஸ்டர், லியோ, விக்ரம் என தொடர்ந்து ஏறுமுகம் காட்டி வந்தார் லோகேஷ். இதனால் அவரது சம்பளமும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு படத்திற்கும் 10 முதல் 20 கோடிகள் வரை கூடுதலாக நிர்ணயித்து வருகிறார். குறைந்தது ஒரு படத்திற்கு 40 கோடிகள் வாங்குகிறார்.

ஏற்கனவே இவர் இயக்கிய விக்ரம் படத்தை தயாரித்த கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் படம் ஹிட்டானதை ஒட்டி இவருக்கு தாராளமாய் வாரி இறைத்தது. து மட்டும் இல்லாமல் விலை உயர்ந்த கார் ஒன்றையும் பரிசாக கொடுத்தார் கமல். இப்படி தொடர்ந்து இவர் காட்டில் அடை மழை பெய்து வருகிறது.

அடுத்தடுத்து இவர் இயக்கக்கூடிய படங்களுக்கு சம்பளத்தை ஏற்றுக் கொண்டே போவதால் தயாரிப்பாளர்கள் திணறி வருகின்றனர். இவர் லிஸ்டில் இன்னும் கைதி 2, விக்ரம் 3 , ரோலக்ஸ் போன்ற படங்கள் வரிசையாக இருக்கிறது. கைதி 2 படத்திற்கு இவர் 75 கோடிகள் சம்பளம் கேட்டு வருகிறார்.

கூலி படத்திற்கு வாங்கியதை விட 25 கோடிகள் அதிகமாக கேட்கிறாராம். இதனால் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு திக்குமுக்காடி வருகிறார். கூலி படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனத்தால் இவருக்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பது சரி வராது என யோசித்து வருகிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் சென்னை வந்த பிறகு கைதி 2வின் சம்பள பேச்சுவார்த்தையை மீண்டும் பரிசீலனை செய்ய உள்ளனர். 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கைதி படம் வெறும் 25 கோடி ரூபாயில் தான் உருவானது. அதனால் இரண்டாம் பாகத்திற்கு 75 கோடி ரூபாய்கள் கொடுப்பது சாத்தியமில்லை என பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.