கூலிக்குப் பிறகு லோகேஷின் படம்.. கைதி 2-க்கு கொடுத்த பிரேக்

Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மாஸ்டர், விக்ரம் படங்களை தொடர்ந்து விஜய்யை வைத்து லியோ படத்தை எடுத்திருந்தார்.

இந்த படம் நடுநிலையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து இப்போது ரஜினியின் கூலி படத்தை எடுத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் எக்கச்சக்க பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். கூலி படத்திற்குப் பிறகு லோகேஷ் கார்த்தியின் கைதி 2 படத்தை எடுப்பார் என கூறப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக வேறு ஒரு படத்தை எடுக்க இருக்கிறாராம்.

லோகேஷ் கனகராஜ் அடுத்த படம்

அதாவது அமேசான் ஓடிடி நிறுவனத்திற்காக LCU என்ற ஷார்ட் பிலிம் எடுப்பதாக இருந்தது. இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியானது. அமேசான் நிறுவனம் இந்த படத்தை சீக்கிரம் முடித்து கொடுக்க சொல்வதால் அடுத்ததாக லோகேஷ் இதில் கவனம் செலுத்து இருக்கிறார்.

மேலும் கார்த்தியின் கைவசம் சர்தார் 2 போன்ற நிறைய படங்கள் அடுத்தடுத்து இருக்கிறது. ஆகையால் அந்த படங்களை முடித்த கையோடு லோகேஷின் கைதி 2 படத்தில் கார்த்தி இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைதி 2 படம் சிறிது கால தாமதம் ஆனாலும் கண்டிப்பாக மாஸ் சம்பவம் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் ரஜினி மற்றும் லோகேஷின் கூலி படம் ஆகஸ்ட் 14 தியேட்டரில் வெளியாக உள்ளது.