1. Home
  2. கோலிவுட்

கூலி படத்துக்கு லோகேஷ் போட்ட கண்டிஷன்கள்.. 3 சூப்பர் ஸ்டார்களை வைத்து நடக்கும் வியாபாரம்

கூலி படத்துக்கு லோகேஷ் போட்ட கண்டிஷன்கள்.. 3 சூப்பர் ஸ்டார்களை வைத்து நடக்கும் வியாபாரம்

ரஜினியின் கூலி படம் 90% சூட்டிங் முடிந்துவிட்டது. அதனுடைய போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ரஜினி படம் ரிலீஸ் ஆவதால் வேறு எந்த ஒரு படமும் அதற்கு முன்னும் பின்னும் ரிலீஸ் ஆகவில்லை.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளர்களிடம் ஒரு பெரிய வேண்டுகோளை விடுத்துள்ளாராம். இனிமேல் படங்களின் ரிலீஸ் தேதியை அவர் தான் முடிவு செய்யப் போவதாக கட்டளை போட்டுள்ளார். லியோ படத்திற்கு பிறகு இந்த ஐடியாவை கையில் எடுத்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினி, அமீர்கான், நாகர்ஜூன் என மூன்று சூப்பர் ஸ்டார்கள் நடித்து வருகின்றனர்.இதுவரை ஆகாத வியாபாரத்தை இந்த படம் பார்த்து விடும் என்று கூறுகிறார்கள். அதிலும் குறிப்பாக தெலுங்கு பக்கம் இந்த படத்திற்கு இப்பவே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நாகர்ஜுனாவிற்கு அங்கே நல்ல மாஸ் இருந்து வருகிறது அதனால் ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பதால் இதன் வியாபாரம் பெரிய லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை போல் பாலிவுட்டிலும் அமீர் கானை, ரஜினியுடன் இணைந்து பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

ஏற்கனவே நெல்சன் இயக்கிய ஜெய்லர் படம் தான் இதுவரை ரஜினி படங்களில் அதிக வசூலை பெற்று தந்த படம். கிட்டத்தட்ட 650 கோடிகள் வசூலித்து இந்த படம் சாதனை செய்தது. இதை முறியடிக்கும் முயற்சியில் தான் இப்பொழுது இந்த பட குழுவினர் இறங்கியுள்ளனர். அமீர்கான், நாகர்ஜுனாவை வளைத்ததற்கு இதுதான் முக்கிய பின்னணி.

Cinemapettai Team
Thenmozhi

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.