Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவரது லைன் அப்பில் கைதி 2, விக்ரம் ரிட்டன், ரோலக்ஸ் ஆகிய படங்கள் இருக்கிறது. சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் லோகேஷ் பேசி இருந்தார்.
அதாவது கூலி படத்திற்கு பிறகு சிறிது பிரேக் எடுக்க போகிறதா கூறினார். ஏனென்றால் ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்து மன அழுத்தம் ஆகிவிட்டது. ஆகையால் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வேலையை தொடங்குவேன் என்று கூறியிருந்தார்.
அதோடு முன்பு ஒரு பேட்டியில் அடுத்து ஒரு பத்து படங்கள் தான் இயக்குவேன் என்று லோகேஷ் கூறியிருந்தார். அதேபோல் சில படங்களை இயக்கிவிட்டு டைரக்ஷனுக்கு எண்டு கார்டு போட்டுவிட்டு ஹீரோ அவதாரம் எடுக்க இருக்கிறார்.
புது அவதாரம் எடுத்த லோகேஷ்
ஏற்கனவே ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ஒரு பாடலில் லோகேஷ் நடித்திருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் லோகேஷ் கதாநாயகனாக நடிக்கும் முதல் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது.
ஏற்கனவே லோகேஷ் தற்போது இயக்கி வரும் கூலி படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது. மேலும் இன்றைய தினம் கூலி படத்தில் இடம்பெற்ற க்ளிப்ஸ் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது.
அதோடு லோகேஷ் படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனென்றால் மாஸ் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார் என்றால் அவரை யார் இயக்குவார் என்ற ஆர்வம் இருக்கத்தான் செய்யும்.