வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விடும் லோகேஷ்.. தளபதி 67 க்கு வில்லனாகும் கோக்குமாக்கு நடிகர்

விஜய்யின் வாரிசு திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ இல்லையோ தளபதி 67 திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்க இருப்பது பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ள நிலையில் அந்த திரைப்படத்திலிருந்து வரும் ஒவ்வொரு அப்டேட்டும் விஜய் ரசிகர்களை கொண்டாட வைக்கிறது.

விரைவில் ஆரம்பிக்கப்படும் இந்த படத்திற்காக பட குழு தற்போது தயாராகி வருகிறது. அதில் லோகேஷ் கனகராஜ் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரித்விராஜ் மற்றும் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் இருவரும் வில்லனாக நடிக்க மறுத்த நிலையில் பல நடிகர்களின் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சம்மதித்துள்ளார். அதற்காக அவருக்கு பல கோடி சம்பளமும் பேசப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து மேலும் இரண்டு வில்லன்களை லோகேஷ் கனகராஜ் தேடிக் கொண்டிருக்கிறார். அதில் தற்போது அவருடைய லிஸ்டில் இருப்பது நடிகர் விஷால் தான்.

சமீபத்தில் லோகேஷ் விஷாலை அவருடைய வீட்டிற்கே சென்று சந்தித்து இது குறித்து பேசி இருக்கிறார். அந்த சம்பவம் தான் இப்போது திரையுலகில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. மேலும் அந்த சந்திப்பில் விஷால் என்ன கூறினார் என்பதை அறியவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் விஷால் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இப்போது வரை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறாராம். இதை பார்த்த பலரும் வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையாக இருக்கிறது என்று லோகேஷ் கனகராஜை பற்றி பேசி வருகின்றனர். ஆனால் விஷால் எப்படியும் இதற்கு சம்மதம் கூறிவிடுவார் என்ற நம்பிக்கையில் பட குழுவினர் இருக்கின்றனர்.

ஏனென்றால் மிகப்பெரும் வசூல் சாதனை படைத்த விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சில நிமிடங்கள் மட்டுமே நடித்த சூர்யாவுக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் இந்த ரோலக்ஸ் கேரக்டர் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அந்த வகையில் விஷாலுக்கும் தளபதி 67 படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரம் தான் என்று கூறப்படுகிறது. அதனால் நிச்சயம் அவர் அந்த வாய்ப்பை நழுவ விடமாட்டார் என்ற நம்பிக்கை லோகேஷுக்கு அதிகமாக இருக்கிறதாம்.