கொள்கையை மாற்றிக்கொண்ட லோகேஷ்.. அஜித்துக்காக கையில் எடுத்த கதை

Lokesh Kanagaraj : அஜித் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்க இருக்கிறார். ராகுல் இந்த படத்தை தயாரிப்பதாக சொல்லப்படும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கதையில் அஜித் நடிக்க இருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களின் படங்களை லோகேஷ் இயக்கிவிட்டார். ஏன் சூர்யாவும் விக்ரம் ‌ படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் லோகேஷ் படத்தில் நடித்து விட்டார். ஆனால் அஜித்தின் படத்தை எப்போது இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதற்கான நேரமும் கை கூடிவிட்டது. அதாவது அஜித்திடம் லோகேஷ் ஒரு கதையை சொல்லி இருக்கிறாராம். அவருடைய படங்களில் எப்போதுமே கத்தி, ரத்தம் போன்ற வன்முறை காட்சிகள் இடம் பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அஜித் படத்தை இயக்கப் போகும் லோகேஷ்

குறிப்பாக கூலி படத்தில் இது மிகவும் பயங்கரமாக இருக்கிறதாம். இப்படி இருக்கும் சூழலில் அஜித்துக்காக தனது பாணியை விட்டுக் கொடுத்திருக்கிறார் லோகேஷ். அவர் எழுதி இருக்கும் கதையில் இதுபோன்று எதுவுமே இல்லையாம்.

இந்த படம் ஒரு துப்பறியும் கதையை கொண்டுள்ளதாம். ஆகையால் மிகவும் திரில்லிங் அனுபவம் கொண்ட படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்துக்கும் இந்த கதை பிடித்து விட்டதாம். ஆகையால் உடனடியாகவே ஓகே சொல்லிவிட்டார்.

லோகேஷ் அடுத்ததாக கைதி 2, அமீர்கானின் படம் மற்றும் விக்ரம் 2 ஆகிய படங்கள் கைவசம் இருக்கிறது. அந்த படங்களை முடித்த பிறகு தான் அஜித்தின் படத்தை லோகேஷ் இயக்குவார் என்று கூறப்படுகிறது.