Shri-Lokesh: இப்போது சோசியல் மீடியாவில் நடிகர் ஸ்ரீ பற்றிய விவாதங்கள் தான் அதிகமாக இருக்கிறது. இறுகப்பற்று படத்திற்கு பிறகு சென்னையை விட்டே கிளம்பிய அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.
ஆனால் அவருடைய instagram பக்கத்தில் தொடர்ந்து வீடியோ போட்டுக் கொண்டுதான் இருக்கிறார். சிலர் அவர் டெல்லி ஹரியானா பகுதியில் இருப்பதாக கூறுகின்றனர்.
சிலர் தாய்லாந்து பகுதியில் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் ஸ்ரீயை யாராலும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.
அவருடைய நம்பருக்கு கால் செய்தாலும் அவர் எடுப்பதில்லை. நெருங்கிய நட்பு வட்டாரங்களே இதனால் தவித்து போய் இருக்கின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க நெட்டிசன்கள் லோகேஷ் கனகராஜை டேக் செய்து எப்படியாவது காப்பாத்துங்க அண்ணா என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இப்படி இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் லோகேஷ் ஸ்ரீயை தொடர்பு கொண்டு பேச முயற்சித்து இருக்கிறார். கூலி பட வேலைகளில் பிஸியாக இருந்தாலும் கூட அவருடைய நம்பருக்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறாராம்.
திரும்பி வருவாரா மாநகரம் ஹீரோ.?
ஆனால் ஸ்ரீ அவருடைய அழைப்பை இதுவரை ஏற்கவில்லை. அப்படி என்னதான் மனிதர்கள் மீது அவருக்கு கோபமோ தெரியவில்லை.
ஆனாலும் தொடர்ந்து தன் அம்மாவுக்கு கால் செய்வதை மட்டும் அவர் நிறுத்தவில்லையாம். அப்போது அவருடைய அம்மா எங்க இருக்க என பதட்டத்தோடு கேட்டால் பதில் எதுவும் சொல்லாமல் கட் செய்து விடுகிறாராம்.
இந்த தகவலை தற்போது வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி தெரிவித்துள்ளார். ஒரு நல்ல திறமையான நடிகர் இந்த அளவுக்கு மாறி போய்விட்டார்.
அவர் மீண்டும் திரும்பி வந்தால் மட்டுமே பல கேள்விகளுக்கும் மர்மங்களுக்குமான விடை கிடைக்கும். திரும்பி வருவாரா மாநகரம் ஹீரோ.