லோகேஷ் கையில் இருக்கும் 4 பார்ட் 2 படங்கள்.. மனசு வைப்பாரா தளபதி.?

Lokesh: லோகேஷ், ரஜினி கூட்டணியில் கூலி படத்தின் சூட்டிங் முடிந்துவிட்டது. ஆகஸ்ட் மாதம் வெளிவர இருக்கும் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அதை அடுத்து 100 நாட்களுக்கு முன்பே சன் பிக்சர்ஸ் சோசியல் மீடியா ப்ரோமோஷன் தொடங்கிவிட்டது விட்டது. அப்போது வெளியான வீடியோவில் தளபதி படத்தில் தலைவர் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

அதிலிருந்து ரசிகர்கள் இப்போது குஷியில் இருக்கின்றனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தன் கைவசம் இருக்கும் பார்ட் 2 படங்கள் பற்றி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதாவது கூலி படத்திற்கு பிறகு கைதி 2 ஆரம்பிக்கப் போகும் அறிவிப்பு வந்தது. இதை அடுத்து விக்ரம் 2 படமும் லோகேஷ் லைன் அப்பில் உள்ளது. அதேபோல் லியோ 2 வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோள்.

மனசு வைப்பாரா தளபதி.?

லோகேஷ் கூட அதற்கான பிளான் வைத்திருக்கிறார். ஆனால் விஜய் அரசியலுக்கு சென்றதால் ஜனநாயகன் படத்தோடு நடிப்பிற்கு ஓய்வு கொடுக்கிறார்.

அதனால இது எப்படி சாத்தியம் என்ற குழப்பம் அனைவருக்கும் இருந்தது. ஆனால் லோகேஷ் விஜய் அண்ணா இப்படி ஒரு முடிவை எடுப்பது தெரியாது. இருந்தாலும் LCU பொறுத்தவரை லியோ 2 உண்டு.

கதாபாத்திரம் மறைமுகமாக கூட இருக்கலாம். எதுவாக இருந்தாலும் ஆரம்பிக்கும் போது தெரியவரும் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ரோலக்ஸ் கதாபாத்திரம் தனி படமாக உருவாக இருக்கிறது.

ஆனால் சூர்யா பிஸியாக இருக்கிறார். அதேபோல் லோகேஷ் கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு வர சில வருடங்கள் ஆகும். அதன் பிறகு இப்படம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மாஸ்டர் 2 பண்ண வேண்டும் என்பது லோகேஷின் ஆசை. இது விஜய்க்கும் கூட தெரியும். அதற்கான பிளான் கூட இருக்கிறது. எல்லோரும் லியோ 2 பிடிக்கும் என்கிறார்கள்.

ஆனால் எனக்கு ஜேடி திரும்ப வர வேண்டும் என்று ஆசை இருக்கிறது. என்ன நடக்கிறது என பார்க்கலாம் என லோகேஷ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.