வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றதை அடுத்து இப்படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் வாரிசு திரைப்படத்தின் பிரமோஷன், ஆடியோ லான்ச் என அடுத்தடுத்து பல சர்ப்ரைஸ்கள் வெளியாக இருக்கிறது.
அதனாலேயே தளபதி 67 பற்றிய அப்டேட்டை பட குழு மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் பொங்கலுக்கு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வாரிசு திரைப்படத்தால் மகிழ்ச்சியில் இருக்கும் விஜய் தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அந்த வகையில் அடுத்து வரும் நான்கு மாதங்கள் முழுவதும் அவர் லோகேஷ் கனகராஜ் உடன் பயணம் செய்ய இருக்கிறார்.
ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தால் பல சாதனை புரிந்த இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டி இருக்கிறது. ஆனால் இப்போது விஜய் இந்த திரைப்படத்தால் கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிறாராம். ஏனென்றால் ஆரம்பத்தில் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் மூணாறு உள்ளிட்ட இடங்களை சுற்றி நடைபெற இருந்தது. அதற்கான வேலைகளிலும் லோகேஷ் ஈடுபட்டு வந்தார். ஆனால் இப்போது அவர் ஒவ்வொரு லொகேஷனாக மாற்றிக் கொண்டிருக்கிறாராம்.
அந்த வகையில் மூணாறில் ஆரம்பித்த லொகேஷன் இப்போது இழுத்துக் கொண்டே காஷ்மீர் வரை சென்று இருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தான் காஷ்மீர் செல்ல லோகேஷ் திட்டமிட்டு இருந்தார். ஆனால் இப்போது அவர் முதலிலேயே காஷ்மீர் போய் படப்பிடிப்பு நடத்தலாம் என்று கூறிவிட்டாராம்.
இதுதான் விஜய்யின் குழப்பத்தை அதிகரிக்க வைத்திருக்கிறது. இறுதியாக ஒரு லொகேஷனை முடிவு செய்யாமல் ஒவ்வொரு இடமாக சொல்லி சொல்லியே லோகேஷ் அலைக்கழித்து கொண்டிருப்பது விஜய்யை அதிருப்தியிலும் ஆழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே வாரிசு திரைப்படம் இழுத்தடித்துக் கொண்டு போனதிலேயே கடுப்பான விஜய் ஒரு வழியாக அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.
இந்நிலையில் தளபதி 67 ஆரம்பிக்கும் முன்னே இவ்வளவு குழப்பத்தில் இருக்கிறது. ஆனாலும் இந்த திரைப்படம் விக்ரம் திரைப்படத்தை காட்டிலும் மாஸ் காட்டும் என்ற நம்பிக்கையும் விஜய்க்கு இருக்கிறது. அந்த வகையில் இந்த படம் கேங்ஸ்டர் திரைப்படமாக இருந்தாலும் காஷ்மீர் வரை சென்று படமாக்கப்படுவதால் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்ற பேச்சும் இப்போதே கிளம்பியுள்ளது. எது எப்படி இருந்தாலும் இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.