லோகேஷின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் காதல் மனைவி.. பலரும் அறிந்திடாத மறுபக்கம்

Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜின் சொந்த வாழ்க்கை இப்போது வரை ரகசியமாகத் தான் இருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் லோகேஷ் கலந்து கொண்ட போது உங்களுக்கு எப்போது திருமணம் என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு சிரித்துக் கொண்டே ஃபர்சனல் கேள்வி கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் லோகேஷுக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் பலருக்கும் தெரியாத ஒன்று. அதாவது படங்களில் ஆக்ஷனில் பட்டையைக் கிளப்பும் லோகேஷ் கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். மேலும் காதல் காட்சிகளே அவரது படங்களில் இடம்பெறாது. இப்போது தான் லியோ படத்தில் விஜய் மற்றும் திரிஷா இடையே ரொமான்ஸ் காட்சிகள் எடுத்திருக்கிறார்.

மேலும் லோகேஷ் தனது நீண்ட நாள் காதலியான ஐஸ்வர்யா என்பவரை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதுவும் அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்று சொன்னால் யாராவது நம்ப முடியுமா? ஆம் ஆத்மிகா மற்றும் ஆருத்ரா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். மேலும் லோகேஷ் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைவதற்கு பின்னால் அவருடைய காதல் மனைவி இருக்கிறார்.

குடும்பத்தை பற்றி யோசிக்காமல் முழுவதுமாக படத்தை மட்டுமே சிந்தனை செய்து கொண்டிருக்கிறார் லோகேஷ். ஏனென்றால் அவருடைய குடும்பத்தை மொத்தமாகவே ஐஸ்வர்யா லோகேஷ் பார்த்துக் கொள்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இவர்கள் திருமணம் செய்து கொண்ட புதிதில் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.

அந்த ஆரம்ப கட்டத்தில் இருவருமே வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்திருக்கின்றனர். மேலும் முதல் குழந்தை பிறந்த பின்பு மனைவி வேலைக்குப் போகாமல் இருந்த சூழலில் லோகேஷ் வங்கி வேளையில் பணி புரிந்திருக்கிறார். அதன் பின்பு படத்தை இயக்கலாம் என்ற முடிவுக்கு வந்த பின் மாநகரம் பூஜை போட்ட முதல் நாள் லோகேஷ் வேலையை விடுகிறார்.

அப்போது முழுவதுமாக சினிமாவில் இறங்கப் போகிறேன் என்று லோகேஷ் முடிவெடுத்த நிலையில் குழந்தை பிறந்த 7 மாதத்திலேயே ஐஸ்வர்யா குடும்ப பொறுப்பை ஏற்று வேலைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு கைதி படத்தில் கையெழுத்திட்டபோது லோகேஷ் இனி தான் சம்பாதித்து குடும்பத்தை பார்த்துக் கொள்வதாக மனைவியை வேலை விடச் சொல்லி இருக்கிறார். இவ்வாறு ஒருவருக்கொருவர் புரிதல் இருந்த காரணத்தினால் தான் லோகேஷ் அபரிவிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறார்.