இரும்பு கை மாயாவிக்கு நோ சான்ஸ்.. சலிப்பா 10 வருட போராட்டத்தை போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்

கிட்டத்தட்ட 11 வருடங்கள் சினிமா துறையில் இருக்கும் லோகேஷ் கனகராஜ், பத்து படங்கள் தான் தன்னுடைய டார்கெட் என சொல்லிக் கொண்டே இருக்கிறார், 2016ஆம் ஆண்டு அவியல் என்ற குறும்படத்தை நண்பர்களுடன் இயக்கினார் அங்கிருந்துதான் அவருக்கு சினிமா கேரியர் தொடங்கியது.

இன்று 2025 கூலி படம் வரை, குறும்படத்தை தவிர்த்து ஆறு படங்கள் இயக்கியுள்ளார். இந்த 6 படங்களும் சூப்பர் ஹிட். இப்பொழுது கோடம்பாக்கத்தில் மோஸ்ட் வான்டெட் இயக்குனர் லிஸ்டில் லோகேஷ் கனகராஜ் தான் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் அவர் கூடிய விரைவில் சினிமா கேரியருக்கு எண்டு கார்டு போடுவதாக பேசிக் கொண்டிருக்கிறார்.

தற்போது ரஜினிகாந்தை வைத்து இயக்கிய கூலி படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளை செய்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் ஜாம்பவான் அமீர்கான் ரஜினிகாந்த் உடன் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் மூலம் அமீர்கானுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு லோகேஷ்க்கு கிடைத்துள்ளது. அந்த அறிமுகத்தால் அடுத்து அமீர் கானை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார். ஏற்கனவே லோகேஷ் லிஸ்டில் இருக்கும் “இரும்புக்கை மாயாவி” படத்தை தான் ஆரம்பிக்கப் போகிறார்கள் என்ற பேச்சுக்கள் அடிபட்டது.

இப்பொழுது லோகேஷ் கொடுத்த பேட்டியில் அந்த படத்தை இல்லை என தெளிவாக கூறிவிட்டார். பத்து வருடத்திற்கு முன்னால் எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் தான் இரும்பு கை மாயாவி. அதில் தொகுத்து வைக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் பாதி படங்களில் வந்துவிட்டது. அதனால் அந்தப் படத்தை புதியதாய் தான் உருவாக்க வேண்டும் என கூறி 10 வருட ஸ்கிரிப்டுக்கு சலிப்பான முடிவு கொடுத்துவிட்டார்.