5 கோடி பட்ஜெட் தான்.. லப்பர் பந்து 13 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

Lubber Pandhu Collection: கடந்த சில வாரங்கள் முன் தமிழரசன் பட்சமுத்து இயக்கத்தில் லப்பர் பந்து என்ற படம் ஆர்ப்பாட்டமே இல்லாமல் வெளியானது. பெரிய படங்களுக்கு தடபுடலாக ப்ரமோஷன் செய்து கடைசியில் நெகட்டிவ் விமர்சனங்கள் வருவதை சமீபகாலமாக பார்க்க முடிகிறது.

ஆனால் சிறிய பட்ஜெட் படங்கள் சத்தமே இல்லாமல் வெளியாகி பாராட்டுக்களை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்திற்கு பிறகு ரசிகர்களை அதிக லப்பர் பந்து படம் கவர்ந்திருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து பல விஷயங்களை இயக்குனர் இந்த படத்தில் கூறியிருந்தார்.

குறிப்பாக ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோரின் காம்போ சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. இதன் வெளிப்பாடாக திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக லப்பர் பந்து படம் சென்று கொண்டிருக்கிறது. படம் வெளியாகி நேற்றுடன் 13 நாட்கள் ஆகிறது.

13 நாட்களில் லப்பர் பந்து செய்த வசூல்

இந்நிலையில் லப்பர் பந்தல் படம் 5 கோடி பட்ஜெட்டில் தான் உருவானது. இதில் நடித்த பிரபலங்களின் சம்பளம் மொத்தமாகவே 70 லட்சம் தான். ஆனால் படம் வெளியாகி 13 நாட்களில் கிட்டத்தட்ட 23 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. இப்போதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.

மேலும் இந்த படம் தீபாவளி போது தான் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. ஆகையால் அதுவரையிலும் நல்ல கலெக்ஷனை லப்பர் பந்து பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி மாபெரும் ஒரு வெற்றி படத்தை தனக்கு கொடுத்ததற்காக ஹரிஷ் கல்யாண் இயக்குனருக்கு சமீபத்தில் தங்கச் சங்கிலியை பரிசாக வழங்கினார்.

பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் இல்லை என்றாலும் நல்ல படங்களுக்கு ரசிகர்கள் எப்போதுமே வரவேற்பு கொடுப்பார்கள் என்பதற்கு லப்பர் பந்து படம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இது போன்ற படங்களை தான் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

வசூல் மழையில் லப்பர் பந்து

Leave a Comment