48 வயதில் முத்தக் காட்சியில் மூச்சுத்திணறிய லஸ்ட் ஸ்டோரீஸ் நடிகை.. இவ்வளவு தாராளம் காட்டுனா பொரட்டி தான் எடுப்பாங்க

இப்போதெல்லாம் கிளாமர் காட்சிகள் சர்வ சாதாரணமாக படங்களில் தென்படுகிறது. அதிலும் லிப் லாக், படுக்கையறை காட்சிகள் இல்லாத படங்களே கிடையாது. அந்த அளவுக்கு ஹீரோயின்களே அதிக சம்பளம் வாங்கிக் கொண்டு கவர்ச்சி தரிசனம் கொடுக்கின்றனர்.

இதில் வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது. அப்படித்தான் 48 வயதாகும் நடிகை கஜோல் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 அந்தாலஜி படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தது பலருக்கும் ஷாக்காக இருந்தது. இருந்தாலும் பாலிவுட்டில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று அதை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் கஜோல் தற்போது நடித்துள்ள ட்ரையல் வெப் சீரிஸிலும் இது போன்ற காட்சிகளில் தாராளம் காட்டி இருப்பது தான் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் முக்கியமாக லிப்லாக் காட்சியில் அவர் நடித்ததை பார்த்த பலரும் இந்த வயதில் இதெல்லாம் தேவைதானா என்று விமர்சித்து வருகின்றனர்.

மேலும் அந்த காட்சிக்காக அவர் இரண்டு முறை ஒத்திகை பார்த்ததும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. தற்போது இது குறித்து அந்த காட்சியில் நடித்த நடிகர் ஆலி வெளிப்படையாக ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார். அதாவது கஜோல் அந்த காட்சியில் நடிப்பதற்கு எந்த விதமான தயக்கமும் படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அது மட்டும் இன்றி கூச்சம் இல்லாமல் இரண்டு முறை ஒத்திகை பார்த்துவிட்டு தான் அந்த காட்சியில் நடித்துக் கொடுத்தாராம். இதுதான் தற்போது மீடியாவில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அந்த வெப் தொடரில் அவர் மூச்சுத்திணற லிப்லாக் கொடுத்த காட்சியும் வைரலாகி வருகிறது.

தமிழில் மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களில் நடித்திருக்கும் கஜோல் பிரபல நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது 48 வயதாகும் இவர் அடுத்தடுத்த படங்களில் ஓவர் கிளாமர் காட்டி வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.