மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் “மாமன்னன்”. இதில் வடிவேலு, ஃபகத் பாசில், லால், கீர்த்திசுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட்ஜெய்ண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைப்பெற்றது.
இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார், மற்றும் சிவகார்த்திகேயன், பா.ரஞ்சித், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகிய பலரும் பங்கேற்றனர். வடிவேலு பாடிய ராசா கண்ணு பாடல் மற்றும் ரஹ்மான் பாடிய ஜிகுஜிகு ரயில் ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு இவற்றில் வடிவேலு பாடிய பாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
உலகநாயகன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் சமீபகாலமாக திரைத்துறையில் பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராக இருப்பதால் மாமன்னன் அவரது கடைசி படமாக இருக்கும் என்று கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கவிருந்த திரைப்படம் நிறுத்தப்பட்டது.
எனினும் தற்போது நடக்கும் இவ்விழாவில் கலந்து கொண்டுள்ளார் கமல்ஹாசன். உதயநிதி மூலமாக தேர்தல் கூட்டணிக்கு ஒரு முக்கிய வாய்ப்பாக கருதியும், இதற்காகவே காத்து கொண்டு இருப்பவர் போல் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
சமீபகாலமாக பல நிகழச்சிகளில் பங்கேற்றாலும் உதயநிதி தன்னை அழைத்தவுடன் வருகிறவர் தனித்து தேர்தலில் களம் இறங்க போவதில்லை என கூட்டணிக்கு வலுசேர்க்கின்றார் என்றும் நன்றாக பார்க்க முடிகிறது. இத்திரைப்படத்தை அரசியல் பின்னனியில் வருகிற கதையாக மாரிசெல்வராஜ் அமைத்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் ரஜினிக்கும் அழைப்பு விடுத்திருந்த போதிலும் ரஜினி தான் வரும் அளவிற்கு இது ஒன்றும் அவ்வளவு முக்கியமான விழா அல்ல என்றும், அரசியல் பின்னனி தான் தனக்கு இந்த அழைப்பு என்று கருதி வர மறுத்து விட்டார். ஆனால் கமலின் வரவு அரசியல் தான் என்று உறுதி செய்துள்ளது. அரசியல் பின்னணியில் இந்த கூட்டணி இணைந்தால் கூட ஆசிரியப்படுவதற்கில்லை.