விஜய் சேதுபதியை வீழ்த்தினார் பகத் பாசில்.. மாரீசன் முதல் நாள் கலெக்சன்

Maareesan First Day Collection : நேற்றைய தினம் தியேட்டரில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி மற்றும் மாரீசன் ஆகிய படங்கள் வெளியானது. இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் காம்போவில் தலைவன் தலைவி காமெடி ஜனரில் எடுக்கப்பட்டிருந்தது.

அதேபோல் வடிவேலு மற்றும் பகத் பாசில் காம்பினேஷனில் வெளியான மாரீசன் படமும் நகைச்சுவை படமாக தான் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு படங்களும் ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் படமாக இந்த வாரம் வெளியாகி இருக்கிறது.

வடிவேலு, பகத் பாசில் இருவருமே நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கின்றனர். ஆனால் தலைவன் தலைவி படத்திற்கு பயங்கரமாக புரமோஷன் செய்திருந்தனர். அதோடு மட்டுமல்லாமல் அதிக திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

மாரீசன் முதல் நாள் கலெக்சன் ரிப்போர்ட்

ஆனால் மாரீசன் படத்திற்கு ப்ரமோஷன் பெரிதாக இல்லை. ஆகையால் தியேட்டரில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இதன் காரணமாக முதல் நாளில் இந்திய அளவில் மட்டும் கிட்டத்தட்ட 78 லட்சம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதுவே தலைவன் தலைவி படம் முதல் நாளில் 4.30 கோடி வசூலை பெற்றிருக்கிறது. மேலும் மாரீசன் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பினால் அடுத்தடுத்த நாட்களில் கண்டிப்பாக வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையில் குடும்பமாக வந்து படத்தை பார்ப்பார்கள் என படக்குழு எதிர்பார்க்கிறது. ‌ பெரிய ஆர்ப்பாட்டத்துடன் வெளியாகும் படங்கள் தோல்வியை தழுவி வரும் நிலையில் இதுபோன்ற குடும்ப சார்ந்த படங்களை ரசிகர்கள் விரும்புகிறார்கள்.