பகத் பாசில் விரித்த வலையில் வடிவேலு சிக்கினாரா.? மாரீசன் முழு விமர்சனம்

Maareesan Review : சுதீஷ் சங்கர் இயக்கத்தில் பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பில் காமெடி ஜானரில் எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் மாரீசன். இந்த படத்தை ஆர் பி சவுத்ரியின் சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் தயாரித்து உள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்துடன் மாரீசன் படம் போட்டி போட்டு உள்ளது. பகத் பாசில் தயாளன் என்ற ஒரு திருடன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் ஒரு பைக்கை கொள்ளையடித்துக் கொண்டு செல்கிறார்.

அப்போது சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் வடிவேலு அதாவது வேலாயுதத்தை சந்திக்கிறார். ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வடிவேலுவிடம் 25 லட்சம் பணம் வங்கியில் இருப்பதை பகத் பாசில் தெரிந்து கொள்கிறார்.

வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் உருவான மாரீசன் விமர்சனம்

அந்த பணத்தை எப்படியாவது திருடி விட வேண்டும் என்று வடிவேலுவுடன் பயணிக்கிறார். அந்த பயணத்தில் பகத் பாசிலை பயன்படுத்திக்கொண்டு வடிவேலு பலரை கொலை செய்கிறார். இந்த கொலைக்கான காரணம் மற்றும் இருவருக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றை நகைச்சுவையாக மாரீசன் படம் கொடுத்துள்ளது.

படத்திற்கு பிளஸ் வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரின் நடிப்புதான். இவர்களில் இடையே ஆனா கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. படத்தில் பல இடங்களில் ரசிகர்களை குபீர் என்று சிரிக்க வைக்கிறது.

யுவனின் இசை மற்றும் படத்தின் மையக்கருத்து ஆகியவை பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்திருக்கிறது. படத்தில் மைனஸ் என்றால் திரில்லர் கதையாக இருக்கும் பட்சத்தில் அதற்கான பரபரப்பை கொடுப்பதில் இயக்குனர் தவறவிட்டிருக்கிறார். படத்தில் சில இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். மற்றபடி குடும்பத்துடன் பார்க்கும் படமாக மாரீசன் உள்ளது.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3/5