Vijay Antony : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு படங்கள் விஜய் ஆண்டனியின் மார்கன் மற்றும் விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா படங்கள் தான். இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
சீரியல் கில்லர் கொலைகாரனை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக விஜய் ஆண்டனி மார்கன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் முதல் நாளில் 85 லட்சம் மட்டும் தான் மார்கன் படம் வசூல் செய்தது.
ஆனால் தொடர்ந்து படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இரண்டாவது நாள் கிட்டத்தட்ட 1.41 கோடி வசூலை பெற்றிருக்கிறது. மேலும் இப்போதும் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மார்கன் மற்றும் கண்ணப்பா படத்தின் இரண்டாவது நாள் வசூல்
மார்கன் படத்தை முந்தும் அளவிற்கு விஜய் மஞ்சுவின் கண்ணப்பா படமும் வசூலை குவித்து வருகிறது. ஏகப்பட்ட திரை பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் சிவபெருமானின் பக்தியை வெளிப்படுத்தும் கண்ணப்பா புராணத்தை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.
இப்படம் முதல் நாளில் கிட்டத்தட்ட 9.35 கோடி வசூலை பெற்றிருந்தது. இரண்டாவது நாளில் சற்று குறைந்து 7 கோடி வசூலை செய்திருந்தது. மொத்தமாக இதுவரை 16 கோடி வசூல் செய்துள்ள நிலையில் தொடர்ந்து வசூல் வேட்டை ஆட இருக்கிறது.
மேலும் தெலுங்கில் உருவான கண்ணப்பா படத்திற்கு தமிழ் ரசிகர்களும் அதிக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.