வெளிநாடுகளில் மாஸ் காட்டிய 3 மலையாள திரைப்படங்கள்..  மனிதத்தை போற்றும் ‘2018’

திரை உலகில் நல்ல கதைகளும் கொண்ட படத்தை உலக அளவில் இருக்கும் ரசிகர்கள் போற்றிக் கொண்டாடுகின்றனர். அப்படி சமீப காலமாக மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக 3 மலையாள படங்கள் வெளிநாடுகளில் ஐந்து மில்லியன் டாலர் வரை மார்க்கெட் ஆகி உள்ளது.

புலிமுருகன்: 2016ம் ஆண்டு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் அதிரடி சாகச திரைப்படமாக வெளியான படம் தான் புலி முருகன். இதில் காடுகளில் இருக்கும் புலி, மனிதர்கள் வாழும் இடத்தில் அச்சுறுத்தலாக இருக்கும்போது அதை வேட்டையாடி மக்களை காப்பாற்றும்  புலி முருகன் கதாபாத்திரத்தில் மோகன் லால் நடித்திருப்பார். இந்த படம் இந்திய அளவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

லூசிஃபர்: 2019 ஆம் ஆண்டு அரசியல் கதைகளத்தை கொண்ட ஆக்சன் திரைப்படமாக வெளியான லூசிஃபர் திரைப்படம்  திரையரங்கில் தாறுமாறாக ஓடி வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தை முரளி கோபி எழுத, பிரித்திவிராஜ் சுகுமார் இயக்கினார். ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மலையாளத்தில் மட்டுமல்ல ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.  வெறும் நான்கே நாட்களில் 50 கோடியையும், 8 நாட்களில் 100 கோடியையும் வசூலித்து சாதனை படைத்தது. வெளிநாடுகளிலும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

2018 : ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தில்கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் வந்த மிகப்பெரிய வெள்ள பாதிப்பை பிரதிபலிக்கும் வகையில் படமாக்கியுள்ளனர்.  இந்த படத்தில் ஒரு பிரச்சனை வரும்போது மக்கள் எவ்வாறு ஒன்று திரண்டு ஒருவர் மற்றவருக்கு உதவி செய்கின்றனர் என்பதையும், மனித குலத்துக்கே இருக்கும் மகத்துவமான குணங்களையும் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

இதில் நரேன், சதீஷ், கலையரசன், கௌதமி, டோவினோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இந்திய அளவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து அங்கேயும் வசூல் தாறுமாறாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு இந்த மூன்று படங்கள் தான் வெளிநாடுகளிலும் மாஸ் காட்டிய மலையாள படங்களாகும். அதிலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் இரண்டு படங்களுடன் 2018  திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை மட்டும் ஐந்து மில்லியன் டாலர் வியாபாரம் ஆகியிருப்பது மோலிவூட்டை பெருமைப்படுத்தி உள்ளது.