Maamannan Collection Report: உதயநிதியின் கடைசி படம் என்ற அறிவிப்பு வந்ததனாலேயே மாமன்னன் படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பது இருந்தது. அது மட்டுமல்லாமல் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்ததும் ஆர்வத்தை தூண்டிய நிலையில் நேற்று இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற ஹிட் படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் இந்த மாமன்னன் மூலம் மீண்டும் தன்னுடைய வெற்றியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னால் சில பல சர்ச்சைகளை சந்தித்து இருந்தாலும் தற்போது அனைவரும் பாராட்டும் படியான ஒரு படைப்பாக இருக்கிறது.
அதிலும் இதுவரை காமெடியனாக மட்டுமே நாம் பார்த்து ரசித்து வந்த வடிவேலுவை மகா நடிகனாக காண்பித்த மாரி செல்வராஜை நிச்சயம் பாராட்ட வேண்டும். அந்த கேரக்டரை உணர்ந்து உயிர் கொடுத்த வைகைப்புயலுக்கும் இப்போது வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் அவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்ற கருத்துக்களும் எழுந்துள்ளது. இவருக்கு அடுத்தபடியாக தன் நடிப்பால் பலரையும் மிரட்டிய பகத் பாசில் ரசிகர்கள் மனதில் மொத்தமாக சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார். இப்படி இப்படம் குறித்த கருத்துக்கள் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று வெளியான மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூல் என்ன என்ற தகவலும் இப்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி நேற்று விடுமுறை நாள் என்பதாலேயே படத்திற்கான கூட்டமும் கரைபுரண்டது. அந்த வகையில் இப்படம் முதல் நாளிலேயே 5.5 கோடி வரை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.
அதன்படி கிட்டத்தட்ட 700 திரையரங்குகளில் ரிலீஸ் ஆன மாமன்னன் தற்போது அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று விடுமுறை தினம் இல்லாத போதிலும் படத்தை பார்ப்பதற்கு குடும்ப ஆடியன்ஸ் திரையரங்குகளில் குவிந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாள் என்பதால் இப்படத்திற்கான வசூலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அது மட்டுமின்றி இப்படத்துடன் சொல்லிக் கொள்ளும் படியாக எந்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. மேலும் அடுத்த வாரமும் எந்த படமும் வெளியாகவில்லை. இதுவே மாமன்னன் வசூலுக்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.