ஜெயிலர் வர்மன் போல் மாறிய மம்மூட்டி.. கறை படிந்த பல், மிரட்டும் லுக்கில் வெளிவந்த பிரமயுகம் போஸ்டர்

Actor Mammootty: மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி 72 வயதிலும் இளமை துள்ளலோடு நடித்துக் கொண்டிருக்கிறார். நேற்று அவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பிரமயுகம் படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தது.

அதுதான் இப்போது மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏனென்றால் அதில் மம்முட்டியின் தோற்றம் இதுவரை இல்லாத அளவுக்கு முற்றிலும் மாறுபட்டு ரசிக்கும் வகையில் இருக்கிறது. ஒரு சாயலில் அவரை பார்க்கும் போது ஜெயிலர் பட வர்மன் போலவும் இருக்கிறது.

சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட அந்த படத்தில் கொடூர வில்லனாக மிரட்டி இருந்த விநாயகன் இப்போது தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக மாறி இருக்கிறார். ஆனால் அவருக்கு முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் மம்மூட்டியை நடிக்க வைக்க தான் நெல்சன் முடிவு செய்திருந்தாராம்.

ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. அதனால் என்ன, இந்த கெட்டப் எப்படி இருக்கு என்று சொல்லும் வகையில் இருக்கிறது பிரமயுகம் போஸ்டர். அந்த அளவுக்கு மம்மூட்டி அதில் கறை படிந்த பல், சட்டை இல்லாமல் அமர்ந்திருந்த தோற்றம், வில்லத்தனமான சிரிப்பு என மிரட்டி இருக்கிறார்.

அதை பார்க்கும் போதே படத்தின் மீதான ஒரு எதிர்பார்ப்பும் தானாகவே உருவாகி விடுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த வயதிலும் மனுஷன் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக கலக்குறாரே என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மிரட்டும் லுக்கில் வெளிவந்த பிரமயுகம் போஸ்டர்

mammootty-bramayugam
mammootty-bramayugam

அந்த வகையில் ராகுல் சதாசிவம் இயக்கும் இந்த படத்தில் மம்மூட்டி வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறாராம். கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் படத்தை விரைவில் முடித்து வெளியிடவும் அவர்கள் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.