எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத மணிரத்தினத்தின் டாப் ஹீரோ.. அப்பாக்கு பிள்ளை தப்பாம பொறந்திருக்கு!

பன்முகத் திறமை கொண்ட இயக்குனர்களில் ஒருவரான மணிரத்தினம் இயக்கிய படங்கள் பல வெற்றி கண்டுள்ளது. இந்நிலையில் இவர் பட ஹீரோ தான் எந்தவித சர்ச்சையிலும் சிக்கவில்லை என்ற தகவல் சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் பிரம்மாண்டமான படப்பிடிப்புடன் ஹிட் கொடுத்த படம் தான் பொன்னியின் செல்வன். இந்நிலையில் 2015ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த காதல் படம் தான் ஓ காதல் கண்மணி. இப்படத்தில் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானும், நித்யா மேனனும் நடித்திருப்பார்கள்.

இப்படம் தற்கால சூழலில் உள்ள லிவ்விங் டுகெதர் காதலை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்டிருக்கும். இப்படத்தின் ஹீரோவான துல்கர் சல்மான் இன்று வரை எந்த சர்ச்சையிலும் மற்றும் கிசுகிசுக்களிலும் சிக்காதவராய் இருந்து வருவது ஆச்சரியத்தை உண்டு படுத்தி வருகிறது.

சினிமாவின் பிரபலத்தின் மகனாகவும், பணக்காரராகவும் மற்றும் அழகானவராகவும் இருக்கும் துல்கர் சல்மான் சினிமாவில் தன் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி வருகிறார். இத்தகைய தன்மை கொண்ட இவர் எந்த சர்ச்சைக்கும் ஆளாக இல்லை என்பது இவரின் பலத்தை குறிக்கிறது.

இவர் தன் சினிமா பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே தன்னை தயார் படுத்திக் கொண்டார் போல என நினைக்கும் அளவிற்கு இவர் மீது எந்த ஒரு குறையும், குற்றமும் இன்று வரை எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சினிமாவில் ஏற்படும் நெகட்டிவுகளை பாசிட்டிவாக கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் செயல்பட்டு வருகிறார்.

ஒரு மீடியாவில் எப்படி பழக வேண்டும், ஒரு பிரபலத்தின் மகன் என்ற கர்வம் இல்லாமல் இயல்பாக பழகவும், சிறந்த கதையை தேர்ந்தெடுத்து படம் நடிப்பதும், மேலும் நல்ல கதை கொண்ட இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிப்பது போன்ற பல செயல்களில் தன்னை கவனமாக ஈடுபடுத்தி வருகிறார். மேலும் தன் ரசிகைகளின் அன்பு தொல்லையில் இருந்தும் மாட்டிக்கொள்ளாமல் நழுவி வருகிறார். இத்தகைய சிறப்புகளுடன் இவர் தன் அடுத்த கட்ட பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்.