Lover Movie Review : இன்றைய காலகட்டத்தில் காதலர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் வித்தியாசமாக கூறியிருக்கிறார் இயக்குனர் பிரபு ராம் வியாஸ். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பக்கவாக தன்னை உருமாற்றிக் கொள்ளும் மணிகண்டன் லவ்வர் படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீ கௌரிப்ரியா நடித்துள்ளார்.
பொஸசிவ் காதலனாக இருக்கும் மணிகண்டன் தனது காதலியை தனது கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள நினைக்கிறார். அதாவது ஒரு பெண் காதலிக்க சம்மதம் சொல்லிவிட்டால் அவள் என்ன செய்தாலும் தன்னுடைய பேச்சைக் கேட்டு தான் செய்ய வேண்டும் என்று சில ஆண்கள் நினைக்கிறார்கள்.
பெண் தனக்கு பிடித்த விஷயத்தை சுதந்திரமாக செய்ய முற்படும் போது காதலன் முட்டுக்கட்டை போடுகிறார். அதுவும் தனது காதலி யார் உடன் பழக வேண்டும், யாருடன் பேச வேண்டும் என்பதை காதலன் தான் முடிவு செய்யும் வேண்டும். அந்த அளவுக்கு ஒரு டாக்ஸிக் காதலனாக மணிகண்டன் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
இவ்வாறு ஒரு காதலன் இடம் சிக்கிக்கொண்டு என்னென்ன பிரச்சனையை காதலி சந்திக்கிறார் என்பதை ஆழமாகவும், அழகாகவும் நடித்துக் காட்டியிருக்கிறார் கௌரி பிரியா. காதலி, பொண்டாட்டி என யாராக இருந்தாலும் கூட அவர்களது ஃப்ரீடமில் தலையிடக்கூடாது என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் பிரபுராம் வியாஸ்.
படத்தின் இன்டெர்வல் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. கதாபாத்திரங்களின் தேர்வும் சரியாக அமைந்துள்ளது. ஷான் ரோல்டன் லவ்வர் படத்திற்கு மேலும் மெருகூட்டும் அளவுக்கு இசையமைத்திருக்கிறார். பிரபு ராம் வியாஸ் இயக்கம் அற்புதமாக உள்ளது.
லவ்வர் படத்திற்கு மைனஸ் என்று சொன்னால் தேவையில்லாத நெகட்டிவ் விஷயங்கள் நிறைய உள்ளது. மேலும் முதல் பாதி சற்று தொய்வுடன் உள்ளது. காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில் காதலர்கள் இடையே ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்தும் படமாக கண்டிப்பாக மணிகண்டனின் லவ்வர் படம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சினிமாபேட்டை ரேட்டிங் : 2.75/5