ராஜமௌலியால் தான் பொன்னியின் செல்வன் சாத்தியம்.. சரண்டராகி பிரமிக்க வைத்த மணிரத்தினம்

இயக்குனர் மணிரத்னத்தின் நீண்டநாள் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படமானது இரண்டு பாகங்களாக வெளிவரப்போகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து படத்திலிருந்து டீசர் மற்றும் படத்தின் பாடல்கள் வரிசையாக வெளியாகிய ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

தற்போது இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வம் படம் உருவாக ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் தான் முக்கிய காரணம் என பிரமித்து பேசியிருக்கிறார். அதாவது 2 பகுதிகளாக கதையை சொல்லி வெற்றி பெறலாம் என்று பாகுபலி படத்தின் மூலம் இயக்குனர் ராஜமவுலி நிரூபித்தால், நீண்ட நாட்களாக நான் யோசித்துக்கொண்டிருந்த விஷயத்திற்கு தீர்வு கிடைத்தது.

இதனால் நம் அனைவருக்கும் ஒரு கதவைத்திறந்து வைத்திருக்கிறார் ராஜமௌலி. இந்த மாதிரியான கதையை எடுக்க முடியும் என்பதை எனக்கு காட்டி, பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க சாத்தியம் ஆக்கினார்.

அதன் விளைவாகத்தான் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்க முடிந்தது என மணிரத்தினம் ராஜமௌலிக்கு நன்றி கூறியுள்ளார்.  இவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க கதையை படமாக்கிய மணிரத்னம் தனக்கு கிடைத்த பேரும் புகழும், தனக்கு மட்டுமல்ல என்று சரண்டராகி ராஜமௌலியை இந்த விஷயத்தில் பிரமித்து பேசியிருக்கிறார்.

மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் நடித்து, 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை அடுத்த மாதம் திரையில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.