மணிவிழா போய் மஞ்சள் விழா வந்தது டும் டும் டும்.. பொறிவைத்து காத்திருக்கும் நந்தினி

குணசேகரன் ஏற்பாடு செய்த மணிவிழா நின்று போனது. இப்பொழுது கதிர் நந்தினியின் மகள் தாரா பெரிய பெண்ணாக ஆளாகிவிட்டாள். அவருக்கு வீட்டு பெண்கள் மஞ்சள் நீராட்டு விழா ஏற்பாடு செய்து வருகிறார்கள். தாராவும் அவர் ஆசைப்படி இந்த விழா நடக்க வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

வீட்டில் எல்லாத்துக்கும் ஆணிவேர் குணசேகரன் தான். அவர் அனுமதியின்றி எதுவும் அசையாது. தாராவும் தன் தந்தை கதிரிடம் தன் ஆசையை கூறி வருகிறார். ஆனால் அவரோ அண்ணன் சம்மதித்தால் எல்லாம் சிறப்பாக நடக்கும் என குணசேகரனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கம் நந்தினி, பெற்ற பிள்ளைக்கு நல்லது செய்யாமல் அண்ணன் அனுமதி தான் முக்கியம் என்று கூறுகிறாரே, என கடும் கோபத்தில் இருக்கிறார். குணசேகரனிடம் அனுமதி வாங்க சென்ற மருமகள்களிடம் தன் தம்பி கதிர் விரும்பினால் நடத்திக் கொள்ளட்டும் என கூறிவிட்டார்.

குணசேகரனுக்கு இதில் விருப்பமில்லாதது போலவும், கதிர் தன் பக்கம் நிற்கிறானா என்பதை சோதிக்கவும் இப்படி ஒரு வார்த்தையை போட்டுவிட்டு சென்றுவிட்டார். ஆனால் நந்தினி தன் பொண்ணுக்கு நல்லது நடந்தே ஆக வேண்டும் என பிடிவாதமாய் நின்று தனது ஆட்டத்தை தொடங்க உள்ளார்.

பெற்ற பிள்ளை பாசத்தை வைத்து நந்தினி இனிமேல் தான் திட்டத்தை நிறைவேற்ற உள்ளார். குணசேகரன் மட்டுமல்லாது விசாலாட்சி அம்மையாருக்கும் மஞ்சள் நீராட்டு விழா தாரா விருப்பப்படி நடப்பதில் இஷ்டம் இல்லை. இதனால் நந்தினி கதிரை வைத்து பகடைக்காய் விளையாட திட்டமிட்டுள்ளார்.